twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினி, கமல் ஆளுமைகளை உருவாக்கிய இயக்குநர்..பாலச்சந்தரின் தீர்க்க தரிசனம்

    |

    இயக்குநர் பாலச்சந்தர் ரஜினி கமல் உள்ளிட்ட பல ஆளுமைகளை உருவாக்கியுள்ளார். அன்றே ரஜினி குறித்து கணித்தது பாலச்சந்தரின் தீர்க்க தரிசனம் எனலாம்.

    இயக்குநர் சிகரம் என போற்றப்பட்ட பாலச்சந்தரின் பிறந்தநாள் இன்று. திரையுலகில் திராவிட கருத்துகள் மேலோங்கியிருந்த காலக்கட்டத்தில் நகரத்து நடுத்தர மக்கள் வாழ்க்கையை குறிக்கும் படங்களை இயக்கி வெற்றி கண்டவர் பாலச்சந்தர்.

    பாலச்சந்தர் நாடகம் மூலம் சினிமாவுக்கு வந்தவர். 60 களில் தொடங்கி 40 ஆண்டுகள் வரை பயணித்தவர், சின்னத்திரையிலும் கால் பதித்து வெற்றிபெற்றவர்.

    விரைவில் புதிய பாதை 2 படம்.. ரூட்டை மாற்றும் பார்த்திபன்.. யார் ஹீரோ இவரா? விரைவில் புதிய பாதை 2 படம்.. ரூட்டை மாற்றும் பார்த்திபன்.. யார் ஹீரோ இவரா?

    தமிழ் சினிமாவும் நாடக்கலையும்

    தமிழ் சினிமாவும் நாடக்கலையும்

    தமிழ் திரையுலகம் பேசும்படம் உருவான காலத்தில் சுதந்திரப்போராட்ட கனலை எதிரொலிக்கும் விதமாகவும், புராண, இதிகாசங்களை சொல்லும் படங்களும் வெளியாகின. பாகவதர், சின்னப்பா, கிட்டப்பா, எஸ்.எஸ்.கிருஷ்ணன் போன்றோர் கோலோச்சிய காலக்கட்டத்தில் சீர்த்திருத்த கருத்துகளும் படங்களில் வெளிவர தொடங்கியது. 50 களில் கே.ஆர்.ராமசாமி, எம்.ஆர்.ராதா, எம்.கே.ராதா, எம்ஜிஆர் போன்றோர் நாடகத்திலிருந்து சினிமாவுக்குள் வந்தனர்.

    கூர்மையான எளிய தமிழ் வசனகர்த்தாக்கள்

    கூர்மையான எளிய தமிழ் வசனகர்த்தாக்கள்

    வசன நடையிலும் மாற்றம் வந்தது. சமஸ்கிருத சொற்கள் குறைந்து தூய தமிழ்ச் சொற்கள் வசனத்தில் இடம்பெற்றது. இளங்கோவன், ஜாவர் சீத்தாராமன், கருணாநிதி போன்றோர் வசனத்தில் பெரும் மாற்றத்தைக்கொண்டு வந்தனர். பின்னர் கண்ணதாசன், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், ஆரூர்தாஸ் போன்றோர் வந்தனர். இந்தக்காலக்கட்டத்தில் முற்போக்கு கருத்துகள் வலுப்பெற்றன.

    மத்தியதர வர்க்கத்தின் பிரதிநிதி பாலச்சந்தர்

    மத்தியதர வர்க்கத்தின் பிரதிநிதி பாலச்சந்தர்

    1960 களில் மேடை நாடகங்களில் நகர வாழ் மத்திய தர வர்க்கத்தினர் இடம்பெற திடங்கினர். அன்றாட வாழ்க்கையில் உள்ள சுவாரஸ்ய விஷயங்கள் அதில் இடம்பெற்றன. அதுபோன்ற நாடகங்களை எழுதி இயக்குவதில் கே.பாலச்சந்தர் முன்னணியில் இருந்தார். இதன்மூலம் திரையிலும் கால் பதித்தார். அவரது அபார வசன நடை, இயக்குநராக காட்சிகளை அமைத்த திறமை அவரை விரைவாக ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் நிலையை ஏற்படுத்தியது.

    நாகேஷும் பாலச்சந்தரும்

    நாகேஷும் பாலச்சந்தரும்

    பாலச்சந்தர் தனது நெருங்கிய நண்பர் நாகேஷை கதாநாயகனாக போட்டு தனது முதல் படமான நீர்க்குமிழியை எடுத்தார். 1964 ஆம் ஆண்டு சர்வர் சுந்தரத்தில் கதாநாயகனாக நடித்த நாகேஷை வைத்து 1965 ஆம் ஆண்டு இப்படத்தை இயக்கி வெளியிட்டார். இப்படத்தில் சௌகார் ஜானகியும் நடித்திருப்பார். படம் முழுவதும் மருத்துவமனையில் எடுக்கப்பட்டிருக்கும். நகைச்சுவையாக நகரும் படம் இறுதியில் நாகேஷ் புற்றுநோயால் மரணமடைவதுபோல் சோகத்தில் முடியும். இது நாகேஷை வேறு கோணத்தில் காட்டிய படமாகும்.

    பெரிய நடிகர்களை பயன்படுத்திய பாலச்சந்தர்

    பெரிய நடிகர்களை பயன்படுத்திய பாலச்சந்தர்

    பாலச்சந்தர் நாடக உலகிலிருந்து திரைத்துறைக்கு வந்ததுபோல் நாடகத்துறையிலிருந்து பலரை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார். நாடகத்துறையிலிருந்து ஏற்கெனவே சினிமாவுக்குள் வந்த நாகேஷ், ஸ்ரீகாந்த், சோ உள்ளிட்ட பலரை பயன்படுத்தினார். ஜெமினி கணேசன், ஜெய்ஷங்கர், முத்துராமன், சிவகுமார், வி.எஸ்.ராகவன், கோபாலகிருஷ்ணன், சௌகார் ஜானகி, ஜெயந்தி, சரிதா போன்றோரையும் அதிகம் பயன்படுத்தினார்.

    ஸ்ரீதர் பாணியிலிருந்து சற்று விலகி

    ஸ்ரீதர் பாணியிலிருந்து சற்று விலகி

    1960 களில் புகழ்பெற்ற ஸ்ரீதர் பாணியிலிருந்து சற்று விலகி பல படங்களை கொடுத்ததால் பாலச்சந்தருக்கு பெண்கள், இளைஞர்கள் கூட்டமும், மத்திடதர வர்க்கத்தினர் கூட்டமும் அதிகம் அமைந்தது. நீர்குமிழியைத்தொடர்ந்து நாகேஷை வைத்து மேஜர் சந்திரகாந்த், பூவா தலையா, பாமா விஜயம், எதிர் நீச்சல் உள்ளிட்ட படங்களை எடுத்தார். இந்தப்படங்களில் ஜெமினி, ஜெய்ஷங்கர், முத்துராமன், ஜெமினி, மேஜர் சுந்தர்ராஜன் என கம்பெனி ஆர்ட்டிஸ்ட் போல அனைவரும் இருப்பார்கள்.

    நகைச்சுவைக்கு பெயர்போன பூவா தலையா, பாமா விஜயம்

    நகைச்சுவைக்கு பெயர்போன பூவா தலையா, பாமா விஜயம்

    பூவா தலையா ஒரு சவால் மிகுந்த படம். வரலட்சுமியிடம் சவால் போட்டு நாகேஷ், ஜெய்ஷங்கர் ஜெயிப்பதை சுவாரஸ்யமாக எடுத்திருப்பார். பாமாவிஜயம் நடுத்தர குடும்பத்தினர் சினிமா நடிகையுடன் கொண்ட நட்பால் வரவுக்கு மீறி செலவு செய்து பாதிக்கப்படுவதை அழகாக சொல்லியிருப்பார். இந்தப்படத்தில் டி.எம்.எஸ் ஒருவரே வரவு எட்டணா, செலவு பத்தணா பாடலுக்கு மேஜர், நாகேஷ், முத்துராமன், பாலைய்யா உள்ளிட்ட 4 பேருக்கும் பாடியிருப்பார்.

    சிறந்த திரைப்படங்கள்

    சிறந்த திரைப்படங்கள்

    பாலச்சந்தர் குடும்பங்களில் உள்ள சிக்கல்கள், சமுதாய பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்களை தனது படங்களில் அதிகம் கையாண்டிருப்பார். இருகோடுகள், எதிர்நீச்சல், மேஜர் சந்திரகாந்த், அரங்கேற்றம், அபூர்வ ராகங்கள், வறுமையின் நிறம் சிகப்பு, உன்னால் முடியும் தம்பி, தண்ணீர் தண்ணீர், கல்யாண அகதிகள் என பல படங்களைச் சொல்லலாம். பாலச்சந்தர் படங்களில் பாடல்களுக்கு முக்கியத்துவம் இருக்கும். பாடல்களிலேயே கதையின் சம்பவம் வருவது போல் இருக்கும்.

    பெரும்பட்டாளத்தை அறிமுகப்படுத்திய பாலச்சந்தர்

    பெரும்பட்டாளத்தை அறிமுகப்படுத்திய பாலச்சந்தர்

    விசு, அனந்து உள்ளிட்ட முக்கியமானவர்கள் பாலச்சந்தரின் உதவி இயக்குநர்கள் வசனகர்த்தாக்களாக இருந்தவர்கள். மௌலி, எஸ்.வி.சேகர், காத்தாடி ராமமூர்த்தி, ஒய்.ஜி.மகேந்திரன், விஜயகுமார், ராதாரவி, ஸ்ரீபிரியா, சரிதா, ஜெய்கணேஷ், படாபட் ஜெயலட்சுமி, சுஜாதா, சங்கர் கணேஷ் என பெரிய பட்டாளமே பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் உண்டு. சிலரை திரும்பத்திரும்ப தனது படங்களில் பயன்படுத்தி பிரபலமடைய வைத்தார்.

    எஸ்பிபிக்கு பாலச்சந்தர் அளித்த கௌரவம்

    எஸ்பிபிக்கு பாலச்சந்தர் அளித்த கௌரவம்

    இது தவிர ரஜினி கமல் போன்ற ஜாம்பவான்களை உருவாக்கியும், கதாநாயகனாக அறிமுகப்படுத்தியும் அவர்கள் முன்னேற்றத்தில் பெரிய பங்கை பாலச்சந்தர் செய்துள்ளார். கமல்ஹாசன், ரஜினி இரண்டுபேரும் இன்றுவரை தங்களது குருவாக பாலச்சந்தரைத்தான் சொல்வார்கள். பாலச்சந்தர் கமலை இந்தியில் அறிமுகப்படுத்தினார். எஸ்.பி.பியை இந்திக்கு அறிமுகப்படுத்தினார். அவர் பாடிய முதல் பாடலே தேசியவிருதை எஸ்பிபிக்கு பெற்றுத்தந்தது. அகரம் படத்தில் எஸ்பிபியை இசையமைப்பாளராகவும் அறிமுகப்படுத்தினார்.

    எம்ஜிஆர், சிவாஜியுடன் திரைப்பயணம்

    எம்ஜிஆர், சிவாஜியுடன் திரைப்பயணம்

    பாலச்சந்தர் எம்ஜிஆரை வைத்து படம் எதுவும் இயக்கவில்லை. ஆனால் எம்ஜிஆர் நடித்த தெய்வத்தாய் படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். சிவாஜியை வைத்து எதிரொலி என்கிற ஒரே ஒரு படத்தை இயக்கினார். தமிழ் அல்லாமல் தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் பாலச்சந்தர் படம் எடுத்துள்ளார். கவிதாலயா நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்துள்ளார். அதில் அண்ணாமலை குறிப்பிடத்தக்க படம்.

    ஆளுமைகளை இருவரை உருவாக்கிய பாலச்சந்தர்

    ஆளுமைகளை இருவரை உருவாக்கிய பாலச்சந்தர்

    பாலச்சந்தர் தொலைக்காட்சித் தொடர்களில் கால் பதித்து அதிலும் முத்திரைப்பதித்தார். 1987 ஆம் ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ பட்டம் கொடுக்கப்பட்டது. திரைத்துறையின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது 2010 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. என்ன விருதுகள் வழக்கப்பட்டாலும் ரஜினி, கமல் எனும் தமிழ் திரையுலகின் இருபெரும் ஆளுமைகளை உருவாக்கியவர் என்கிற பெருமை பாலச்சந்தருக்கு உண்டு. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் 2014 ஆம் ஆண்டு காலமானார். திரையுலகில் பாலச்சந்தரின் பாணி தனிப்பாணி அவருக்குப்பின் அந்த இடம் வெற்றிடமாகவே உள்ளது.

    English summary
    Director Balachander has created many personalities including Rajini Kamal. initial days Balachander's prediction about Rajini is a prophetic vision.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X