»   »  விபத்தில் சிக்கிய 'தி டர்ட்டி பிக்சர்' நடிகை! - என்ன ஆனது?

விபத்தில் சிக்கிய 'தி டர்ட்டி பிக்சர்' நடிகை! - என்ன ஆனது?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை : சில்க் ஸ்மிதா வாழ்க்கையைப் பற்றிய படமான 'தி டர்ட்டி பிக்சர்' படத்தில் நடித்தவர் வித்யா பாலன். பாலிவுட் உள்பட பல மொழிகளில் நடித்து வருகிறார். சென்சார் போர்டு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார் வித்யா பாலன்.

இவர் மும்பையில் பாந்த்ரா நோக்கிச் சென்றுகொண்டிருக்கும்போது எதிர்பாராவிதமாக இன்னொரு கார் மீது இவரது கார் மோதியிருக்கிறது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக நடிகை வித்யா பாலனுக்கு எதுவும் ஆகவில்லை. சிறு சிறு காயங்களோடு தப்பியிருக்கிறார்.

The dirty picture actress met an accident

சினிமா நடிகர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் அவர்களது ரசிகர்களால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாது. என்ன ஆனது எப்படி ஆனது எனப் புலம்ப ஆரம்பித்து விடுவார்கள். சினிமா நடிகர்கள் கார் விபத்தில் சிக்கி வருவதும் வாடிக்கையாகி வருகிறது.

வித்யா பாலனின் கார் விபத்துக்குள்ளான செய்தி அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைச் செய்தாலும் அவருக்கு எதுவும் ஆகவில்லை என்பது கொஞ்சம் ஆறுதலைக் கொடுத்துள்ளது.

English summary
Vidya Balan is starring in Silk Smitha's life story 'The Dirty Picture'. Her car is unexpectedly crashed into another car while traveling in Mumbai. Luckily actress Vidya Balan escaped with minor injuries in this accident.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil