twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தடை கோரும் தமிழக அரசு.. விளக்கம் கொடுக்கும் இயக்குநர்கள்.. தி ஃபேமிலி மேன் 2 ரிலீசாகுமா?

    |

    சென்னை: மனோஜ் பாஜ்பாயி, பிரியாமணி மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகி உள்ள ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸை ரிலீஸ் செய்யக் கூடாது என மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

    ஒடிடி தளங்களில் ஒளிபரப்பாகும் படைப்புகளுக்கு சென்சார் இல்லாத நிலையில், ஆபாச வசனங்கள், ஆபாச காட்சிகள் மற்றும் இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துக்களும் அதில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

    அன்புத் தம்பிகளே.. இதுதான் நீங்கள் எனக்கு தரும் பிறந்த நாள் பரிசு.. நடிகர் கார்த்தி உருக்கமான கடிதம்அன்புத் தம்பிகளே.. இதுதான் நீங்கள் எனக்கு தரும் பிறந்த நாள் பரிசு.. நடிகர் கார்த்தி உருக்கமான கடிதம்

    ஈழத் தமிழர்களுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பது போல தி ஃபேமிலி மேன் 2ம் பாகம் உருவாகி உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அந்த தொடரை தடை செய்ய வேண்டும் என தமிழகம் முழுவதும் எதிர்ப்பு குரல்கள் எழுந்துள்ளன.

    கேரள இளைஞர்கள்

    கேரள இளைஞர்கள்

    தி ஃபேமிலி மேன் முதல் பாகத்தில் கேரளாவை சேர்ந்த இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் அங்கம் வகித்து இருப்பதாக சித்தரிக்கப்பட்டு இருந்தன. நாளிதழ்களில் வரும் செய்திகளின் அடிப்படையிலேயே இந்த கதையை உருவாக்கி உள்ளோம் என தி ஃபேமிலி மேன் வெப் தொடரிலேயே இயக்குநர்கள் அறிவித்துள்ளனர்.

    இலங்கை தமிழர்கள்

    இலங்கை தமிழர்கள்

    முதல் பாகம் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், இரண்டாம் பாகத்தின் ரிலீசுக்கு ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தனர். இதில், நடிகை சமந்தா வில்லியாக நடித்திருப்பதாக முன்னதாக செய்திகள் வெளியாகிய நிலையில், தென்னிந்திய சினிமா ரசிகர்களும் இந்த வெப் தொடருக்காக காத்திருந்தனர். ஆனால், சமீபத்தில் ரிலீசான டிரைலரில் நடிகை சமந்தா விடுதலை புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர் போல சித்தரிக்கப்பட்டு இருப்பதை பார்த்த பலரும் இந்த வெப் தொடர் மீது தங்களின் அதிருப்தியை தெரிவித்து அதனை தடை செய்ய கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    சமந்தாவுக்கு கண்டனம்

    சமந்தாவுக்கு கண்டனம்

    நடிகை சமந்தாவுக்கு சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட ரசிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். சென்னையை சேர்ந்த சமந்தா இப்படி தமிழர்களின் மனங்களை புண்படுத்தும் விதமான கதையை எப்படி தேர்வு செய்து நடிக்கலாம் என்றும் கேள்வி எழுப்பினர். அதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் அமைதியாக நம்பிக்கையுடன் காத்திருங்கள் என பதிலளித்தார்.

    தடை கோரிய தமிழக அரசு

    தடை கோரிய தமிழக அரசு

    தி ஃபேமிலி மேன் 2 வரும் ஜூன் 4ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ள நிலையில், அதன் டிரைலர் கிளப்பிய சர்ச்சையால் தமிழகம் முழுவதும் கண்டன குரல்கள் எழுந்தன. சீமான், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கண்டனங்களை பதிவு செய்ய தமிழக அரசு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு இந்த தொடரை ஒளிபரப்பக் கூடாது என தடை விதிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளது.

    இயக்குநர்கள் விளக்கம்

    இயக்குநர்கள் விளக்கம்

    இந்த வெப் தொடரை இயக்கி உள்ள இரட்டை இயக்குநர்களான ராஜ் மற்றும் டிகே, தமிழர்களின் உணர்வுகளை நன்கு அறிவோம். வெப் தொடர் வெளியாகும் வரை சற்றே பொறுமையுடன் காத்திருங்கள். நிச்சயம் தமிழர்களின் மனங்களை புண்படுத்த மாட்டோம், நம்புங்கள் என்று விளக்க அறிக்கை கொடுத்துள்ளனர்.

    தடை செய்யப்படுமா

    தடை செய்யப்படுமா

    தி ஃபேமிலி மேன் 2 விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ரிலீசுக்கு முன்னதாக அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு போட்டு காண்பிக்கப்படுமா? ஆட்சேபனையான காட்சிகள் மற்றும் வசனங்கள் இடம்பெற்று இருந்தால் தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடர் தடை செய்யப்படுமா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

    தமிழ் நடிகர்கள்

    தமிழ் நடிகர்கள்

    முதல் பாகத்திலேயே பிரியாமணி, ஆடுகளம் கிஷோர் உள்ளிட்ட தமிழ் நடிகர்கள் நடித்திருந்தனர். இரண்டாம் பாகத்தில் சமந்தா, மைம் கோபி, தேவதர்ஷினி, அழகம் பெருமாள் உள்ளிட்ட பலரும் இந்த வெப் தொடரில் நடித்துள்ளனர். இந்த வெப் தொடரில் நடித்துள்ள அனைவருக்கும் எதிராக கண்டனங்களும் தொடர்ந்து வலுத்து வருகின்றன. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை எதிர்நோக்கி பலரும் காத்திருக்கின்றனர்.

    English summary
    The Family Man 2 directors Raj and DK explains about the webseries after TN government seeks ban and strong apposition
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X