twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    செய்றது எல்லாமே அவரு தான்… ரஜினியோட பேரை கெடுக்க வேண்டாம்: அலர்ட் செய்த ரசிகர் மக்கள் மன்ற நிர்வாகி!

    |

    சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.

    ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறார் ரஜினிகாந்த்.

    இந்நிலையில், ரஜினிகாந்த் குறித்து சமூக வலைத்தளங்களில் வலம் வரும் செய்தி குறித்து உண்மையான தகவல் கிடைத்துள்ளது.

    கோமாளி படத்தில் அப்படி ட்ரோல் பண்ணியே.. இப்போ பாரு.. பிரதீப் ரங்கநாதனை விளாசும் ரஜினி ரசிகர்கள்! கோமாளி படத்தில் அப்படி ட்ரோல் பண்ணியே.. இப்போ பாரு.. பிரதீப் ரங்கநாதனை விளாசும் ரஜினி ரசிகர்கள்!

    ரஜினியின் ஜெயிலர், லால் சலாம்

    ரஜினியின் ஜெயிலர், லால் சலாம்

    அண்ணாத்த படத்தைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் இந்தப் படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் அடுத்தாண்டு ஏப்ரலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க ரஜினி கமிட் ஆகியுள்ளார். ரஜினியுடன் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

    ரசிகர் மன்ற நிர்வாகி அறிக்கை

    ரசிகர் மன்ற நிர்வாகி அறிக்கை

    ஜெயிலர், லால் சலாம் படங்களில் பிஸியாக இருக்கும் ரஜினிகாந்த் குறித்து, சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது. அதாவது ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகரன் சிறுநீரகப் புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் நிலையில், அவரது சிகிச்சைக்காக ரஜினி பண உதவி செய்யவில்லை என்பது போன்ற செய்திகள் வெளியாகின. இதனை மறுத்துள்ள ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகரன், அவசர அவசரமாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

    ரஜினிக்கு களங்கம் வேண்டாம்

    ரஜினிக்கு களங்கம் வேண்டாம்

    அதில், தலைவர் ரஜினிகாந்தின் அபரிதமான நன்மதிப்பை குலைப்பதற்காக இணையத்தில் ஒரு பொய்ப் பிரசாரம் உலா வருகிறது. இந்த இக்கட்டான காலங்களில் தலைவர் எனக்கு உதவவில்லை என்ற செய்தி முற்றிலும் போலியானது. உண்மையில் எனது சிறுநீரகப் புற்றுநோய் சிகிச்சைக்கான மருத்துவச் செலவு முழுவதையும் எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் பார்த்துக் கொண்டவர் தலைவர். இப்போது வரை அவர் மட்டுமே நிதி உதவியையும் தார்மீக ஆதரவையும் வழங்குகிறார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    மிகவும் வருந்துகிறேன்

    மிகவும் வருந்துகிறேன்

    மேலும், "ரஜினி செய்த உதவிக்காக எங்கள் குடும்பம் என்றென்றும் நன்றி உள்ளவர்களாக இருப்போம். சிகிச்சைக்கான நிதி சேகரிக்கும் பிரசராத்தை எனது மகனின் நண்பர்கள் எனக்குத் தெரியாமல் அவர்களால் முடிந்த உதவியை செய்வதற்காக தொடங்கினார்கள். தலைவர் ரஜினிகாந்த் எனக்கு உதவவில்லை என்பதால் இது தொடங்கப்பட்டது என்று வெளியான செய்தி போலியானது. இது, தலைவரின் நல்லெண்ணத்தையும் குணத்தையும் பாதித்துள்ளது. அதற்காக நான் மிகவும் வருந்துவதாக" கூறியுள்ளார். பெரும்பாலும் இப்போது வாட்ஸப் போன்ற சமூக ஊடகங்களில் வைரலாகும் செய்திகளின் உண்மைத்தன்மை என்னவென்று தெரியாமல் மக்கள் ஷேர் செய்து வருகின்றனர். அதற்கு இந்தச் சம்பவம் ஒரு உதாரணம் என ரஜினியின் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

    English summary
    Rajinikanth has been doing medical expenses for my kidney cancer treatment for the past year. Rajini Makkal Mandra Nirvaagi Sudhakaran's statement that the news that Rajini did not help him is completely fake.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X