For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  திடீரென அழைப்பு அரண்டு போன ரசிகர்கள்..அஜித் வைத்த வேண்டுகோள்..அதுதான் அவர் மனசு

  |

  தங்கள் காரை பின் தொடர்ந்து வந்த ரசிகர்களை அஜித் கூப்பிட பயந்துக்கொண்டே போனவர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

  தங்களை தங்கள் தலைவர் கடுமையாக திட்ட போகிறார் என்ற பயந்தவர்களுக்கு அவர் கேட்ட வாக்குறுதி அதிர்ச்சியை நெகிழ்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

  இப்படி கூட ஒரு மனிதர் இருப்பாரா? என ரசிகர்கள் அவர் சொன்ன விஷயம் குறித்து போட்ட வாய்ஸ் மெசேஜ் ட்ரெண்டாகி வருகிறது.

  அடம் பிடிக்கும் அஜித்.. துவளும் துணிவு.. தமிழகம் தாண்டி எங்கும் போணியாகலை? டல்லடிக்கும் பிசினஸ்!அடம் பிடிக்கும் அஜித்.. துவளும் துணிவு.. தமிழகம் தாண்டி எங்கும் போணியாகலை? டல்லடிக்கும் பிசினஸ்!

   யதார்த்த மனிதர் அஜித்

  யதார்த்த மனிதர் அஜித்

  தமிழ் திரை உலகில் மிக மிக எதார்த்தமான ஒரு மனிதர் என்றால் அஜித் குமாரை சொல்லலாம். ஆரம்ப காலத்தில் ஒரு நிலை வளர்ந்த பின்னால் ஒரு நிலை என்ற இல்லாமல் எப்பொழுதும் ஒரே நிலையில் இருப்பவர் என்றால் அது அஜித் மட்டுமே. அனைவரையும் மதிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் வாழ்பவர் அஜித். புகழ்ச்சியும் பெருமையும் அவரை உயரத்தில் வைத்திருந்தாலும் அவைகளை தன் மனதுக்குள் நெருங்க விடாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர் அஜித் குமார் என்று பலரும் திரையுலகில் பேசுவதை கேட்டு இருக்கிறோம். பெரிய நடிகரானாலும் சிறிய நடிகரானாலும் ஒரே விதமான மரியாதையை கொடுக்கக் கூடியவர் என்று எம்.எஸ்.பாஸ்கர் ஒரு தடவை மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

   திறமைகளின் குவியல் அஜித்

  திறமைகளின் குவியல் அஜித்


  அஜித் குமார் நடிப்பை ஒரு தொழிலாக பார்க்கிறார். அதனால் அவர் அதை கடந்து பல திறமைகளை வளர்த்துக் கொண்டுள்ளார். அஜித்குமாரின் விருப்பமான விஷயம் பைக் ரேஸ், அதை இன்று வரை அவர் கைவிடவில்லை. அதேபோல் கார் ரேஸில் முறைப்படி கலந்துகொண்டு அதில் வெற்றியும் பெற்றவர். துப்பாக்கி சுடுதல், ட்ரோன்களை இயக்குவது என அஜித்தின் திறமை பல மடங்கு விரிவடைந்துள்ளது. துப்பாக்கி சுடுவதில் ரைபிள் கிளப்பில் இணைந்து போலீசார் உடன் போட்டியில் கலந்து கொண்டவர் கொஞ்சம் கூட மிகப் பெரிய நடிகர் என நினைக்காமல் கலந்து கொண்டார் அஜித். அதில் வெற்றியும் பெற்றார். அதேபோன்று ட்ரோன் டெக்னாலஜியில் அஜித்தின் டெக்னாலஜி அறிவைப்பார்த்து அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் அவரிடம் பயிற்சி பெற்றனர்.

   மோட்டார் பைக்கில் உலகம் சுற்றும் வாலிபன்

  மோட்டார் பைக்கில் உலகம் சுற்றும் வாலிபன்

  அஜித்துக்கு எப்போதெல்லாம் பட படப்பிடிப்பில்லையோ அப்பொழுதெல்லாம் தன்னுடைய மோட்டார் பைக்கில் ஊரைச் சுற்ற கிளம்பி விடுவார், ஊரைச் சுற்றி என்று சொல்வதை விட உலகத்தை சுற்ற கிளம்பி விடுவார் என்று சொல்லலாம். அந்த அளவு மோட்டார் பைக் ரைடிங்கில் ஆர்வம் மிக்கவர் அஜித் குமார். அப்படிப்பட்டவர் தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக உச்சத்தில் இருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். தன்னுடைய ரசிகர்களை மிகவும் நேசிப்பவர் அஜித் அதை நிரூபிக்கும் சம்பவம் நேற்று நடந்துள்ளது. அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

   சென்னையில் நடந்த படபிடிப்பில் ரசிகர்கள் தொல்லை

  சென்னையில் நடந்த படபிடிப்பில் ரசிகர்கள் தொல்லை

  சமீபத்தில் சென்னையில் அஜித்தின் படபிடிப்பு நடந்துள்ளது. அப்போது ரசிகர்கள் அவரை பார்க்க ஷூட்டிங் ஸ்பாட்டில் குவிந்துள்ளனர். அஜித்தை பார்க்க சுவற்றின் மீதெல்லாம் ஆபத்தான முறையில் ஏறியுள்ளனர். இதையெல்லாம் அஜித் கவனித்துள்ளார். பின்னர் அவர் வீட்டுக்கு கிளம்பும் நேரம் அவரது காரை பின் தொடர்ந்துள்ளனர். இதில் ஒரு ரசிகர் ஐந்து நாளாக தனது மாற்றுத்திறனாளி நண்பருடன் அஜித்தை காண ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துள்ளனர். வழக்கம்போல் அவர் வீட்டுக்கு செல்லும்போது அவர்கள் காரை பின் தொடர்ந்துள்ளனர். பின்னர் அவர்கள் வீட்டுக்கு திரும்பிவிட்டனர்.

   ரசிகர்களை வீட்டுக்கு அழைத்த அஜித்..ரசிகர்களிடம் வைத்த கோரிக்கு

  ரசிகர்களை வீட்டுக்கு அழைத்த அஜித்..ரசிகர்களிடம் வைத்த கோரிக்கு

  அவர்களுக்கு அன்று இரவே அஜித்திடமிருந்து அழைப்பு வந்துள்ளது. தலையை பார்க்கும் ஆவலுடன் அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கிருந்த அஜித் அவர்களைப்பார்த்து என்ன செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். படிக்கிறோம் என்று சொல்ல அவர்களை அருகில் அழைத்துள்ளார். திட்டப்போகிறாரோ என பயத்துடன் சென்ற அவர்கள் தோள் மீது கைவைத்து இதுபோல் செய்யக்கூடாது, எனக்கு உங்களை நினைத்தால் பயமாக இருக்கிறது. சுவற்றில் ஏறி பார்க்கும்போது கீழே விழுந்து விபத்து ஏற்பட்டால் என்னாவது, காரை பின் தொடர்கிறீர்கள் இதனால் என் ஓட்டுநர் காரை ஓட்டுவதில் சிரமம் ஏற்படுகிறது. விபத்து ஏதாவது நேர்ந்தால் அனைவருக்கும் கஷ்டம் இனிமேல் யாரும் இதுபோல் செய்யக்கூடாது, இதை நான் உங்களிடம் சொல்வதை நான் சொன்னதாக நீங்கள் ரசிகர்களிடம் சொல்லவேண்டும். என் வேண்டுகோள் இது என கூறியுள்ளார்.

   அஜித் கோரிக்கையால் நெகிழ்ந்த ரசிகர்கள்

  அஜித் கோரிக்கையால் நெகிழ்ந்த ரசிகர்கள்

  இதை கேட்ட ரசிகர்கள் நெகிழ்ந்து போய் விட்டனர். இவ்வளவு அன்பாக அக்கறையுடன் நம்மிடம் பேசுகிறார், மற்றவர்களிடம் என் வேண்டுகோளாக சொல்லுங்கள் என சொல்கிறாரே என நெகிழ்ந்து போய் அப்படியே செய்கிறோம் எனக் கூறிவிட்டு வந்துள்ளனர். வந்தவுடன் முதல் வேலையாக இந்த மெசேஜை பேசி வெளியிட்டுள்ளனர். அஜித்துடன் அவர்கள் நிற்கும் புகைப்படத்துடன் இந்த வாய்ஸ் மெசேஜ் தற்போது வைரலாகி வருகிறது. அஜித் அஜித்துதான் என்கின்றனர் நெட்டிசன்கள்.

  English summary
  A pleasant surprise awaited the fans who were afraid to call Ajith who followed their car. His promise to those who were afraid that their leader was going to rebuke them shocked and moved them. Does such a person even exist? The voice message posted by fans regarding what Ajith said is becoming a trend.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X