twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஊரெல்லாம் கொரோனா சோகம்.. இன்று வந்த உகாதி.. திரையுலகினர் வாழ்த்து

    |

    சென்னை: தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் இன்று தெலுங்கு புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர் இதனை அடுத்து அவர்களுக்கு திரை பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    Recommended Video

    Celebrity Cooking Challenge | Shanthanu KiKi | Roja | Self Quarantine

    உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை அடுத்து எவை இயங்கும் எவை இயங்காது என நேற்று இரவு மத்திய அரசு அறிவித்தது, மேலும் இந்திய முழுவதும் கொரோனா பாதிப்பு 500 நபர்களை தாண்டியது.

     The Festival ugadi celebrities wishes

    இன்று தெலுங்கு மற்றும் கன்னட மக்களுக்கு புத்தாண்டு அதாவது அவர்களுக்கு நியூ யர் இந்த நாளை அவர்கள் "யுகாதி" என்று கொண்டாடுவார்கள். இந்த இனிய நாளை கொண்டாடும் விதமாக பல திரை பிரபலங்கள் தெலுங்கு மற்றும் கன்னட மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

    தெலுங்கு சினிமா உலகின் மெகா ஸ்டார் என்று எல்லோராலும் அழைக்கப்படுபவர் சீரஞ்சிவி. ஆந்திராவின் உச்ச நட்சத்திரங்களான என்.டி.ஆர் மற்றும் நாகேஸ்வர ராவ்க்கு பிறகு ஆந்திராவில் ஒரு மாஸ் அண்டு கிளாஸ் சேர்ந்த ஒரு ஹீரோ தான் சீரஞ்சிவி பிரனம் கரேடு படம் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். அன்று துவங்கி இன்று வரை அவர் தான் அங்கு மெகா ஸ்டார்.

    இன்று தெலுங்கு மக்களுக்கு யுகாதி வாழ்த்துக்களை வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, நான் இன்று தான் சமூக வலைதளங்களில் நுழைகின்றேன் என் மக்களுக்கு ஒரு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். இந்த இனிய நாளில் உங்களுக்கு ஒரு நல்ல செய்தியை கூறவே இணைகிறேன் என கூறியுள்ளார்.

    கன்னட திரையுலகில் ஒரு பெரிய நட்சத்திரம் தான் ராஜ் குமார் அவருக்கு இரண்டு மகன்கள் மூத்த மகன் சிவ ராஜ்குமார் இளைய மகன் தான் இந்த புனித் ராஜ் குமார். இவரை கன்னட திரையுலக ரசிகர்கள் பவர் ஸ்டார் என்று தான் அழைப்பார்கள். குழந்தை நட்சத்திரமாக இருந்த போதே தேசிய விருதை வென்றவர், சினிமா குடும்பத்தில் இருந்து வந்தாலும் இவர் தனது நடிப்பால் உயர்ந்தார், அங்கு இவருக்கு என்று ஒரு மார்க்கெட் உண்டு. இன்று கன்னட மக்களுக்கு தனது யுகாதி வாழ்த்துக்களை வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

    அவர் கூறிய வாழ்த்துச் செய்தியில், நாம் அனைவரும் இணைந்து கொரோனா வைரஸ்க்கு எதிராக போராடி வருகிறோம், இந்த புதிய வருடம் ஆரம்பத்தை நாம் நம் வீட்டில் இருந்து கொண்டாடுவோம். நம் வீட்டை கடவுள் இருப்பது போல நாம் பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் புனித் ராஜ் குமார்.

    English summary
    Ugadi is being celebrated today all over Andhra, Telangana and Karnataka.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X