Don't Miss!
- News
விசிலடிக்கும் குக்கர்.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுகவுக்கு 2 கட்சிகள் ஆதரவு! யாரு பாருங்க!
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- Lifestyle
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வெளியானது போஸ்ட் அபோகலிப்டிக் திரில்லரான 'கலியுகம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
'விக்ரம் வேதா', 'நேர்கொண்ட பார்வை', 'விட்னஸ்' படங்களை தொடர்ந்து நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும்கலியுகம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. அண்மையில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரோகிணி நடிப்பில் Sony Liv ஓடிடி தளத்தில் வெளியான விட்னஸ் திரைப்படம் வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் கிஷோர் நடிக்கும் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
இயக்குநர் பிரமோத் சுந்தர் இயக்கம் இத்திரைப்படத்தை பிரைம் சினிமாஸ் எனும் நிறுவனத்தின் உரிமையாளரான கே. எஸ். ராமகிருஷ்ணா, ஆர். கே. இன்டர்நேஷனல் மற்றும் இன்கார்ப்பரேட் எனும் நிறுவனம் இணைந்து தயாரிக்கினறன.
ராம்சரண் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டான் வின்சென்ட் இசை மற்றும் ஒலி வடிவமைப்பு செய்திருக்கிறார். சக்தி வெங்கட்ராஜ் கலை இயக்கத்தை கவனிக்க, பட தொகுப்பு பணிகளை நிம்ஸ் மேற்கொண்டிருக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் கருப்பொருளை நுட்பமான விவரங்களுடன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
படத்தைப் பற்றி இயக்குநர் பிரமோத் சுந்தர் பேசுகையில், '' மூன்றாம் உலகப்போருக்கு பிறகு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை 'கலியுகம்' விவரிப்பதோடு போரின் பின் விளைவுகள் மற்றும் இதன் விளைவாக உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் சந்திக்கவிருக்கும் இழப்புகள் உள்ளிட்ட பல சமகால நெருக்கடிகளும் திரைக்கதையில் இடம்பெற்றிருக்கிறது.'' என்றார்.
போஸ்ட் அபோகலிப்டிக் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதிலிருந்து, இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் எழுந்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
கோடிக்கணக்கில் சம்பளத்தை உயர்த்திய சிம்பு,.. காத்திருந்த இயக்குநர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி
-
இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக.. தளபதி 67 படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய சன் டிவி!
-
தளபதி 67ல் கமிட்டான சஞ்சய் தத்துக்கு இத்தனை கோடி சம்பளமா?... அதிர்ச்சியில் கோலிவுட் நடிகர்கள்!