பெப்பர் அண்ட் சால்ட் லுக்கில் சிரஞ்சீவி… காட்ஃபாதர் பர்ஸ்ட் லுக் அவுட் !

சென்னை : மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்துள்ள காட்ஃபாதர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் சிறப்பு தோற்றத்திலும், நயன்தாரா பூரி ஜெகநாத், சத்யா தேவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

காட்ஃபாதர் திரைப்படம் தசரா பண்டிகையின் போது வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளதால், சிரஞ்சீவியின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

"காட்ஃபாதர்"

மெகாஸ்டார் சிரஞ்சீவி நடித்துள்ள "காட்ஃபாதர்" திரைப்படம் இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் பெப்பர் அண்ட் சால்ட் லுக்கில் வெறித்தனமாக இருக்கிறார் சிரஞ்சீவி. ராம் சரணின் கொனிடேலா தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த போஸ்டர் வெளியான சிறிது நேரத்திலேயே இணையத்தில் மிகப்பெரிய வைரலானது.

வெறித்தனம்

வெறித்தனம்

சிரஞ்சீவியின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் ஒரு சிறிய வீடியோ வெளியாகி உள்ளது. அதில். ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் அவருக்காக அலுவலகத்திற்கு வெளியே காத்திருக்க, சிரஞ்சீவி ஒரு அம்பாசிடர் காரில் வருகிறார். கார் சட்டென்று நிற்க சிரஞ்சீவி காரில் இருந்து வெளியே வந்து அலுவலகத்திற்குள் வெறித்தனமாக நடக்கிறார். அப்போது காட்ஃபாதர் என்ற தலைப்பு அற்புதமான BGMத்துடன் மிரட்டலாக வருகிறது. இந்த கெட் அப்பில் சிரஞ்சீவியை பார்க்க செம மாஸாக இருக்கிறார்.

காட்ஃபாதர் ரிலீஸ்

காட்ஃபாதர் ரிலீஸ்

மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்திற்கு, தமன் இசையமைத்துள்ளார். ஆர்.பி. சௌத்ரி தனது தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார். மேலும் காட்பாதர் திரைப்படம் தசரா பண்டிகையின் போது வெளியாகும் என்ற தகவலையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

Recommended Video

ACTOR CHIRANJEEVIயுடன் நடித்த அனுபவம் | ACTOR KISHORE CHAT PART-01| C/O KADHAL | FILMIBEAT TAMIL
லூசிஃபர்

லூசிஃபர்

2019ம் ஆண்டு மலையாளத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற லூசிஃபர் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தெலுங்கு ரீமேக் காட்பாதர் ஆகும். இதில் மோகன்லால், டோவினோ தாமஸ், மஞ்சு வாரியர், இந்திரஜித் சுகுமாரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். லூசிஃபர் திரைப்படத்தின் மூலம் பிருத்விராஜ் சுகுமாரன் இயக்குநராக அறிமுகமானார்.

வசூல் சாதனை படைக்கும்

மேலும் லூசிஃபர் படத்தில் கௌரவ தோற்றத்திலும் பிருத்விராஜ் நடத்திருந்தார். காட்பாதர் படத்தில் பிருத்விராஜின் வேடத்தில் சல்மான் கான் நடிப்பார் என்று கூறப்படுகிறது. மலையாளப் படத்தில் மஞ்சு வாரியர் நாயகியாக நடித்திருந்த நிலையில், அதன் தெலுங்கு ரீமேக்கில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X