தனுஷை எங்கப்பா காணோம்...தி கிரே மேன் ப்ரோமோவை ரிப்பீட் மோடில் பார்க்கும் ரசிகர்கள்

சென்னை : அவெஞ்சர்ஸ் இன்பினிட்டிவார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம், கேப்டன் அமெரிக்கா படம் தி கிரே மேன். இந்த படத்தில் கிறிஸ் ஈவான்ஸ், ரயன் காஸ்லிங் ஆகியோருடன் தனுஷ் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். உலக சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக தி கிரேன் மேன் அமைந்துள்ளது.

இந்த படம் ஜுலை 15 ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அதே சமயம் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்ட ஒரே வாரத்தில் ஓடிடி.,யிலும் தி கிரே மேன் ரிலீஸ் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஜுலை 22 ம் தேதி தி கிரேன் மேன் படம் நெட்ஃபிளிக்சில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

The Gray Man new promo released without Dhanush

தி கிரே மேன் படத்தை பிரம்மாண்ட பொருட் செலவில் நெட்ஃபிளிக்ஸ் தயாரித்துள்ளது. இதற்கான ப்ரொமோ இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதிரடி ஆக்ஷன் காட்சிகள், அசத்தல் இசையுடன் இந்த ப்ரொமோ வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இதில் தனுஷ் இல்லை. இந்த படத்தில் தனுஷ் கேங்ஸ்டர் ரோலில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

தனுஷ் இருக்கிறாரா என்பதை பார்ப்பதற்காக ரசிகர்கள் இந்த ப்ரொமோ வீடியோவை ரிப்பீட் மோடில் பார்த்து வருகின்றனர். தனுஷ் இல்லாதது வருத்தம் அளிப்பதாக இருந்தாலும், படத்தின் ரிலீசிற்காக காத்திருப்பதாக ரசிகர்கள் பலர் வேதனையுடன் கமெண்ட் செய்திருக்கின்றனர்.

எல்லா தியேட்டர்லையும் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதா, எங்க ஹாலிவுட் ஹீரோ எங்கப்பா ப்ரோமோவில் என ரசிகர்கள் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் குறிப்பிட்ட தியேட்டர்களில் மட்டும் தான் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் தனுஷின் ட்விட்டர் பக்கத்தில் இருந்த ப்ளு டிக்கை ட்விட்டர் நிறுவனம் நீக்கி விட்டதாக ட்விட்டரில் வதந்தி பரவியதால் ரசிகர்கள் பதற்றமடைந்தனர். ஆனால் தனுஷின் அதிகாரப்புர்வ ட்விட்டர் பக்கத்தில் உள்ள ப்ளு டிக் அகற்றப்படவில்லை என தெரிந்ததும் தான் ரசிகர்கள் சமாதானம் அடைந்தனர்.

வதந்தி பரவிய சிறிது நேரத்திலேயே தனுஷ் பக்கத்தில் இருந்த ப்ளு டிக் எங்கே என அதிகமானவர்கள் விசாரிக்க துவங்கி விட்டனர். திடீரென ப்ளு டிக் நீக்கியவதற்கு என்ன காரணம் என்றும் விசாரித்து கமெண்ட் செய்ய துவங்கியதால் சோஷியல் மீடியாவே பதற்றமடைந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X