தனுஷிற்காக கிரே மேன் டீம் செய்ய போகும் காரியம்...உற்சாகத்தில் தனுஷ் ஃபேன்ஸ்

சென்னை : அவெஞ்சர்ஸ் இன்பினிட்டிவார், அவெஞ்சர்ஸ் என்ட்கேம், கேப்டன் அமெரிக்கா படங்களை இயக்கிய ஜோய் ருசோ - ஆன்டனி ருசோ இயக்கி உள்ள படம் தி கிரே மேன். இந்த படத்தில் கிறிஸ் ஈவான்ஸ், ரயன் காஸ்லிங் ஆகியோருடன் தனுஷ் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். உலக சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக தி கிரேன் மேன் அமைந்துள்ளது.

 Dhanushs interesting reply about The Grey man movie chance

இந்த படம் ஜுலை 15 ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அதே சமயம் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்ட ஒரே வாரத்தில் ஓடிடி.,யிலும் தி கிரே மேன் ரிலீஸ் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஜுலை 22 ம் தேதி தி கிரேன் மேன் படம் நெட்ஃபிளிக்சில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

தி கிரே மேன் படத்தை பிரம்மாண்ட பொருட் செலவில் நெட்ஃபிளிக்ஸ் தயாரித்துள்ளது. இதற்கான ப்ரொமோ சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதிரடி ஆக்ஷன் காட்சிகள், அசத்தல் இசையுடன் இந்த ப்ரொமோ வெளியிடப்பட்டது. ஆனால் இதில் தனுஷ் இல்லை. இந்த படத்தில் தனுஷ் கேங்ஸ்டர் ரோலில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

தனுஷ் இருக்கிறாரா என்பதை பார்ப்பதற்காக ரசிகர்கள் இந்த ப்ரொமோ வீடியோவை ரிப்பீட் மோடில் பார்த்தனர். தனுஷ் இல்லாதது வருத்தம் அளிப்பதாக இருந்தாலும், படத்தின் ரிலீசிற்காக காத்திருப்பதாக ரசிகர்கள் பலர் வேதனையுடன் கமெண்ட் செய்திருக்கின்றனர். எல்லா தியேட்டர்லையும் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதா, எங்க ஹாலிவுட் ஹீரோ எங்கப்பா ப்ரோமோவில் என ரசிகர்கள் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினர். ஆனால் குறிப்பிட்ட தியேட்டர்களில் மட்டும் தான் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

தி கிரே மேன் பட ரிலீசிற்கு இன்னும் 3 நாட்களே உள்ளதால் படம் பற்றி தனுஷ் அளித்த பேட்டி வீடியோ ஒன்றை நெட்ஃபிளிக்ஸ் இந்தியா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த பேட்டியின் விபரம் இதோ...

*தனுஷ் எப்படி இருக்கீங்க (தமிழில்)?

நல்லா இருக்கேன்.

*தி கிரே மேன் ஷுட்டிங் அனுபவம் எப்படி இருந்தது. ஒரே வார்த்தையில் சொல்லுங்க

நம்ப முடியாததாக உள்ளது.

*உங்களின் எதை பார்க்க இந்திய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்

இந்த படம் ரோலர் கோஸ்டர். ஆக்ஷன், கதை, விறுவிறுப்பு, வெறித்தனமான ஸ்டன்ட், சேசிங் காட்சிகள். மக்களின் எதிர்பார்ப்பை புர்த்தி செய்யும் அனைத்தும் இந்த படத்தில் இருக்கும். அதை ரசிகர்கள் என்ஜாய் பண்ணுவார்கள் என நினைக்கிறேன்.

*நீங்கள் எங்களுக்காக ஒரு அறிவிப்பு வைத்திருக்கிறீர்களாமே

ஆமாம். 2 திறமையான நபர்களுடன் நான் பணியாற்றி உள்ளேன்.

தனுஷின் பேட்டிக்கு இடையே படத்தின் டைரக்டர்களான ஜோய் ருசோ - ஆன்டனி ருசோ ஆகியோர் தோன்றி, நாங்கள் விரைவில் இந்தியா வந்து எங்களின் நண்பர் தனுஷை சந்திக்க போகிறோம். எங்களின் புதிய படமான தி கிரேன் மேன் படத்திற்காக. இந்திய மக்களே தயாராகுங்கள். விரைவில் உங்களை சந்திக்க உள்ளோம் என்றனர்.

ஹாலிவுட் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட தனுஷிடம், தி கிரே மேன் பட வாய்ப்பு உங்களுக்கு எப்படி கிடைத்தது என கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த தனுஷ், எப்படி என எனக்கே தெரியவில்லை. ஜோய் ருசோ - ஆன்டனி ருசோ என்னை தொடர்பு கொண்டு ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க வேண்டும் என கேட்டனர். ஓ அப்படியா என சாதாரணமாக கேட்டேன். அவர்கள் விளையாட்டிற்காக கேட்கிறார்கள் என நினைத்து தான் ஓகே சொன்னேன் என்றார். இதை கேட்ட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் சிரித்து விட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X