»   »  தமிழகத்தில் கனவிலும் நடக்காததை கேரளாவில் சாதித்த ஆர்யா

தமிழகத்தில் கனவிலும் நடக்காததை கேரளாவில் சாதித்த ஆர்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: ஆர்யா தயாரித்து நடித்த தி கிரேட் ஃபாதர் படத்தின் முதல் நாள் வசூல் கபாலி, புலி முருகன் படங்களின் முதல் நாள் வசூலை விட அதிகம்.

நடிகர்கள் ப்ரித்விராஜ், ஆர்யா, சந்தோஷ் சிவன், ஷாஜி நடேசன் தயாரித்த மலையாள படமான தி கிரேட் ஃபாதர் நேற்று ரிலீஸானது. மம்மூட்டி, ஆர்யா, சினேகா உள்ளிட்டோர் நடித்த இந்த படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ரிலீஸானது.

படத்தை ஹனீப் இயக்கியிருந்தார்.

தி கிரேட் ஃபாதர்

தி கிரேட் ஃபாதர்

கேரளாவில் 202 தியேட்டர்களில் ரிலீஸான தி கிரேட் ஃபாதர் நேற்று மட்டும் ரூ.4. 31 கோடி வசூல் செய்துள்ளது. இதன் மூலம் கேரளாவில் முதல் நாள் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது தி கிரேட் ஃபாதர்.

கபாலி

கபாலி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி படம் கேரளாவில் ரிலீஸான அன்று ரூ. 4.20 கோடி வசூலித்திருந்தது. இது தான் முதல் நாள் வசூலில் இதுவரை சாதனையாக இருந்தது.

புலிமுருகன்

புலிமுருகன்

மோகன்லால் நடிப்பில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த புலிமுருகன் படம் கூட கேரளாவில் ரிலீஸான அன்று ரூ. 4.05 கோடி தான் வசூலித்தது. மலையாள படம் ஒன்று ரிலீஸான அன்று அதிகம் வசூல் செய்தது என்றால் அது புலிமுருகன் தான்.

முறியடிப்பு

முறியடிப்பு

தி கிரேட் ஃபாதர் படம் கபாலி மற்றும் புலிமுருகன் ஆகிய படங்களின் முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்துள்ளது. இதனால் தயாரிப்பாளர் ஆர்யா மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

சினேகா

சினேகா

ஒரு குழந்தைக்கு தாயான பிறகு குட்டி பிரேக் எடுத்துவிட்டு மீண்டும் நடிக்க வந்த சினேகா ஹீரோயின் கதாபாத்திரம் தான் வேண்டும் என அடம்பிடித்த நேரத்தில் தி கிரேட் ஃபாதர் பட வாய்ப்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Mammootty starrer The Great Father has beaten Kabali and Puli Murugan in first day collection in Kerala by raking Rs. 4.31 crore.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil