»   »  'பேட்மேன் vs சூப்பர்மேன்' வசூல் வரலாற்றை முறியடித்த 'இந்தியச் சிறுவன்'

'பேட்மேன் vs சூப்பர்மேன்' வசூல் வரலாற்றை முறியடித்த 'இந்தியச் சிறுவன்'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'தி ஜங்கிள் புக்' திரைப்படம் 'பேட்மேன் vs சூப்பர்மேன்' படத்தின் முதல்நாள் வசூலை இந்தியாவில் முறியடித்திருக்கிறது.

கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவில் வெளியான படம் 'தி ஜங்கிள் புக்'. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீல் சேதி என்னும் சிறுவன் இப்படத்தில் நாயகனாக நடித்திருந்தான்.

The Jungle Book beats Batman V Superman record

தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் வெளியான இப்படம் பலபேரின் மலரும் நினைவுகளைத் தூண்ட விளைவு, முதல் நாளில் இப்படம் 10.09 கோடிகளைத் தாண்டியது.

இதன்மூலம் 2016 ம் ஆண்டின் மிகப்பெரிய ஓபனிங் பெற்ற 2 வது திரைப்படம் என்ற பெருமை ஜங்கிள் புக்கிற்கு கிடைத்துள்ளது.

உலகம் முழுவதும் வசூலைக் குவித்த 'பேட்மேன் vs சூப்பர்மேன்', இந்தியாவில் 8.25 கோடிகளை முதல்நாளில் வசூலித்து சாதனை படைத்திருந்தது.

தற்போது 10 கோடிகளைத் தாண்டியதன் மூலம் 'பேட்மேன் vs சூப்பர்மேன்' படத்தின் வசூலை 'ஜங்கிள் புக்' முறியடித்துள்ளது.

இந்தியாவில் மிகப்பெரிய ஓபனிங் பெற்ற படங்களில், முதலிடத்தை 12.35 கோடிகளுடன் அக்ஷய்குமாரின் 'ஏர்லிப்ட்' தக்க வைத்துள்ளது.

மற்ற நாடுகளைவிட ஒருவாரம் முன்னதாகவே இந்தியாவில் வெளியாகியிருக்கும் 'ஜங்கிள் புக்', மேலும் பல உலக சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
The Jungle Book beats Batman V Superman record in India.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil