»   »  "சூப்பர் ஸ்டார்"களுக்கு சவால் விடும் "ஜங்கிள் புக்" நீல் சேத்தி!

"சூப்பர் ஸ்டார்"களுக்கு சவால் விடும் "ஜங்கிள் புக்" நீல் சேத்தி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'தி ஜங்கிள் புக்' திரைப்படம் ரூ 101 கோடிகளை இந்தியாவில் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

கடந்த 6 ம் தேதி இந்திய வம்சாவளிசிறுவனான நீல் சேதியின் நடிப்பில் 'தி ஜங்கிள் புக்' திரைப்படம் இந்தியாவில் வெளியானது.

ஹாலிவுட் படமென்றாலும் இந்தியக் கதையின் தழுவல் என்பதால் இப்படம் ஒருவாரம் முன்னதாகவே இந்தியாவில் வெளியானது.

The Jungle Book Enters 100 Crore Club

இந்நிலையில் 10 நாட்கள் முடிவில் இப்படம் ரூ 101 கோடிகளை இந்தியாவில் மட்டும் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

ஆங்கில மொழியில் ரூ 46 கோடிகளையும் தமிழ், தெலுங்கு, இந்தியில் ரூ 55 கோடிகளையும் 'தி ஜங்கிள் புக்' குவித்துள்ளது.

இப்படத்தின் அபார வசூலால் பவன் கல்யாணின் 'சர்தார் கப்பர் சிங்' மற்றும் ஷாரூக்கானின் 'பேன்' படங்களின் வசூலானது பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இதில் 'தி ஜங்கிள் புக்' திரைப்படத்துடன் வெளியான 'சர்தார் கப்பர் சிங்' வசூலில் இன்னும் 50 கோடிகளைக் கூடத் தொடவில்லை.

10 நாட்களில் 100 கோடிகளை வசூல் செய்த படங்களில் அக்ஷய்குமாரின் 'ஏர்லிப்ட்' முதலிடத்தையும், 'தி ஜங்கிள் புக்' 2 வது இடத்தையும் கைப்பற்றியுள்ளது.

Read more about: the jungle book fan
English summary
Box Office: The Jungle Book Enters 100 Crore Club in 10 Days.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil