»   »  ஓடு... ஓடு... ஓடு... மகள் தியாவை உற்சாகப்படுத்திய ஜோ!

ஓடு... ஓடு... ஓடு... மகள் தியாவை உற்சாகப்படுத்திய ஜோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நடந்த குழந்தைகளுக்கான கிட்டத்லான் போட்டியில் பங்கேற்ற தனது மகள் தியாவை நடிகை ஜோதிகா நேரில் சென்று உற்சாகப் படுத்தினார்.

சூர்யா - ஜோதிகா காதல் தம்பதியின் மூத்த மகள் தியா. இவர் நேற்று முன் தினம் சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற குழந்தைகளுக்கான கிட்டத்லான் போட்டியில் கலந்துகொண்டார்.

பள்ளிக் குழந்தைகள் உட்பட ஏராளமான குழந்தைகள் இதில் பங்கேற்றனர்.

ஜோதிகா...

ஜோதிகா...

இந்தப் போட்டியை நேரில் காண நடிகை ஜோதிகாவும் வந்திருந்தார். திடீரென மேடை ஏறிய ஜோதிகா, மைக்கில் தனது மகளை உற்சாகப் படுத்தினார். கூட்டத்தில் இருந்தவர்களும் கைதட்டி, ஆரவாரம் செய்து தியாவை உற்சாகப் படுத்தினர்.

36 வயதினிலே...

36 வயதினிலே...

நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஜோதிகா நடித்துள்ள 36 வயதினிலே படத்திலும், ஜோதிகா மாரத்தானில் ஓடுவது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

பர்த்டே பேபி...

பர்த்டே பேபி...

இந்நிலையில் நேற்று தனது 8வது பிறந்தநாளைக் கொண்டாடினார் தியா. அவருக்கு சூர்யா மற்றும் ஜோதிகாவின் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளப் பக்கங்கள் மூலம் தெரிவித்தனர்.

சூர்யா நன்றி...

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார் சூர்யா. அதில், ‘தியா ஆசிர்வதிக்கப் பட்ட சிறுமி. உங்களது வாழ்த்துக்களுக்கு நான், ஜோதிகா, தியா மற்றும் தேவ் மிகப்பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்' எனப் பதிவிட்டுள்ளார்.

English summary
Madras Round Table 94 packed in quite a punch on Sunday morning, bringing together over 2000 enthusiastic kids in one of the largest kids run in the country on 9th August 2015 at the second edition of Chennai Kidathon- a highly successful fitness event.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil