ஒரே நாளில் இரண்டு அப்டேட்...கலக்கும் அண்ணாச்சியின் தி லெஜண்ட் டீம்

சென்னை : லெஜண்ட் சரவணன் நடித்துள்ள தி லெஜண்ட் படத்திற்கு ஒரே நாளில் இரண்டு அப்டேட்களை வெளியிட்டு, அனைவரையும் அசர வைத்துள்ளது படக்குழு. ஒரு பிரம்மாண்டத்திற்கே சோஷியல் மீடியா தாங்கவில்லை. இதில் இன்னொரு பிரம்மாண்டமா என அனைவரும் கேட்டு வருகின்றனர்.

லெஜண்ட் சரவணன் ஹீரோவாக அறிமுகமாகும் படம் தி லெஜண்ட். ஜெடி- ஜெர்ரி இயக்கும் இந்த படத்தில் லெஜண்ட் சரவணன், ஊர்வசி ரெளதேலா, கீதிகா, விவேக், பிரபு உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். லெஜண்ட் சரவணன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

விரைவில் ரிலீஸ் செய்யப்பட உள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. சையின்ஸ் ஃபிக்சர் படமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஊர்வசி ரெளதேலா மைக்ரோபயோலஜிஸ்ட் ரோலில் நடத்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹீரோவான அண்ணாச்சி

ஹீரோவான அண்ணாச்சி

இது வரை தனது கடை விளம்பரங்களில் மட்டுமே பல்வேறு ஹீரோயின்களுடன் நடித்து வந்த அண்ணாச்சி, இந்த படத்தில் வித்தியாசமான ரோலில் நடித்து ஹீரோயினாக அறிமுகமாகிறார். விவேக் கடைசியாக நடித்த படம் என்பதாலும் இந்த படத்தின் மீது அனைவருக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது.

மே 20 ல் வருது வாடிவாசல்

மே 20 ல் வருது வாடிவாசல்

தி லெஜண்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளாக மொசலோ மொசலு பாடல் ஒரு மாதத்திற்கு முன் வெளியிடப்பட்டது. இந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இரண்டாவது சிங்கிளை படக்குழு வெளியிட உள்ளது. இது வாடிவாசல் என துவங்கும் செகண்ட் சிங்கிள் மே 20 ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஒரே நாளில் இரண்டு அப்டேட்

ஒரே நாளில் இரண்டு அப்டேட்

வாடிவாசல் என சூர்யா பட டைட்டிலில் செகண்ட் சிங்கிள் வெளியிடப்பட உள்ளதால் அப்படி என்ன பாடலாக இருக்கும் என அனைவரும் ஆவலாக பார்த்துக் கொண்டிருக்கையில் அடுத்த அப்டேட்டை வெளியிட்டு அசர வைத்துள்ளனர் படக்குழுவினர். ஒரே நாளில் இரண்டு அப்டேட்கள், அதுவும் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ள அப்டேட்கள் வெளியிடப்பட்டுள்ளதால் அனைவரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.

என்னது அடுத்த பிரம்மாண்டமா

என்னது அடுத்த பிரம்மாண்டமா

தி லெஜண்ட் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மே 29 ம் தேதி அன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்தப்பட உள்ளதாம். தற்போது தான் இந்த அரங்கில் கமலின் விக்ரம் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடத்தப்பட்டது. இந்த பிரம்மாண்ட விழா பற்றி தகவல்களே இன்னும் வந்து முடியவில்லை. அதற்குள் அண்ணாச்சி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அதே அரங்கில் நடத்தப்பட உள்ளதால் அனைவரின் கவனமும் தற்போது அந்த விழா மீது திரும்பி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X