twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இனி யாருமே தடுக்க முடியாது.. உலகம் முழுவதும் தட்டி தூக்கப்போகுது ‘தி லெஜண்ட்’

    |

    சென்னை : சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் கதாநாயகனாக நடிக்கும் தி லெஜண்ட் திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமத்தை பிரபல முன்னணி தயாரிப்பு நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

    Recommended Video

    The Legend | Action Hero-வாக அவதாரம், இனி யாருமே தடுக்க முடியாது

    சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் அனைத்து வயதுடைய ஹீரோயின்களுடனும் ஆட்டம் போட்டு வந்த சரவணன் அருள், வெள்ளித்திரையில் காலடி எடுத்துவைத்து மிரட்ட உள்ளார்.

    உல்லாசம், விசில் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இரட்டை இயக்குநர்களான ஜேடி - ஜெர்ரி இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் தி லெஜ்ண்ட் .

    தி கிரே மேன் பட சான்ஸ் கிடைத்தது எப்படி...தனுஷ் சொன்ன சுவாரஸ்ய பதில் தி கிரே மேன் பட சான்ஸ் கிடைத்தது எப்படி...தனுஷ் சொன்ன சுவாரஸ்ய பதில்

    தி லெஜண்ட்

    தி லெஜண்ட்

    லெஜண்ட் சரவணா ஸ்டோரின் உரிமையாளர் சரவணன் அருள் இந்த படத்தின் மூலம் திரைத்துறையில் தனது அறிமுகத்தை கொடுக்க உள்ளார். தி லெஜண்ட் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌதாலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். இப்படத்தில் மறைந்த நடிகர் விவேக், மயில்சாமி, பிரபு, நாசர், சச்சு, ரோபோ சங்கர், யோகிபாபு, ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யாஷிகா ஆனந்த், ராய்லட்சுமி ஆகியோர் பாடலுக்கு மட்டும் நடனமாடி உள்ளனர்.

    பிரம்மாண்ட இசைவிழா

    பிரம்மாண்ட இசைவிழா

    'தி லெஜண்ட்' திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த விழாவில், பூஜா ஹெக்டே, தமன்னா, ஹன்சிகா, ராய் லட்சுமி, ஷ்ரதா ஸ்ரீநாத், யாஷிகா ஆனந்த், டிம்பிள் ஹயாதி, ஸ்ரீ லீலா, நுபுர் சனான், ஊர்வசி ரௌதாலா ஆகியோர் கலந்து கொண்டனர். இசை வெளியீட்டு விழாவே கலர்புல்லாக மிகவும் கோலாகலமாக நடந்தது.

    வைரலான டிரைலர்

    வைரலான டிரைலர்

    தி லெஜண்ட் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. எடுக்குறேன் சார்...அவதாரம் எடுக்குறேன் என்ற வசனத்தோடு சைன்டிஸ்ட் ஆக்‌ஷன் ஹீரோவாக அவதாரம் எடுக்கிறார். 'இந்த முறை நான் அடிக்கற அடி மரண அடியாத்தான் இருக்கும்'என்று மிரட்டி இருந்தார் சரவணன் அருள். இணையத்தில் வெளியானதும் இந்த டிரைலர் மிகப்பெரிய அளவில் டிராண்டானது.

    வெளிநாட்டு உரிமம்

    வெளிநாட்டு உரிமம்

    இந்நிலையில் இந்த படத்தின் வெளிநாட்டு உரிமத்தை பிரபல முன்னணி தயாரிப்பாளர் ஏபி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மேலும், தமிழக உரிமையை கோபுரம் பிலிம்ஸ் மதுரை அன்புச்செழியன் ரூபாய் 30 கோடிக்கு கைப்பற்றியுள்ளார்.

    800 திரையரங்குகளில்

    800 திரையரங்குகளில்

    தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாக உள்ள இத்திரைப்படம் உலகம் முழுவதும் ஜூலை 28ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 800 தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. பல விமர்சனங்களை கடந்து இன்று ஹீரோவாக என்ட்ரி கொடுத்திருக்கும் சரவண அருளின் படத்தைப் பார்க்க பலர் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

    English summary
    Saravanan arul’s The Legend entire overseas signed by AP International. July 28 worldwide theatrical release
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X