twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    The Legend Box Office Collection: தி லெஜண்ட் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

    |

    சென்னை: பான் இந்திய படமாக 5 மொழிகளில் வெளியான தி லெஜண்ட் திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் குவிந்துள்ளன.

    ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் லெஜண்ட் சரவணன், ஊர்வசி ரவுத்தேலா, கீத்திகா, பிரபு, விவேக், யோகி பாபு நடிப்பில் நேற்று தமிழ்நாட்டில் 800 திரையரங்குகளிலும், உலகளவில் 2500 திரையரங்குகளிலும் தி லெஜண்ட் திரைப்படம் வெளியானது.

    பெரிய பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்பதை இங்கே பார்ப்போம்..

    என்ன கதை

    என்ன கதை

    சர்க்கரை வியாதியால் மரணிக்கும் நண்பர் ரோபோ சங்கரின் இழப்பால் வாடும் டாக்டர் சரவணன் அதற்கு மருந்து கண்டுபிடிக்க போராடுவதும், அவரை அந்த மருந்தை கண்டுபிடிக்க விடாமல் வில்லன் சுமன் மற்றும் அவரது ஆட்கள் தடுப்பதும் தான் படத்தின் கடை. ஜவுளி சாம்ராஜ்யத்தை நடத்தி வந்த லெஜண்ட் சரவணன் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக உருவாகி உள்ளார்.

    விமர்சனம் எப்படி

    விமர்சனம் எப்படி

    இரட்டை இயக்குநர்களான ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிப்பில் வெளியான இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். நேற்று வெளியான தி லெஜண்ட் திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் குவிந்துள்ளன. ஜாலியாக நண்பர்களுடன் படத்தை பார்த்து சிரித்து மகிழலாம் என சோஷியல் மீடியாவிலும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தனர்.

    பட்ஜெட்

    பட்ஜெட்

    லெஜண்ட் சரவணன் நடிப்பில் வெளியான தி லெஜண்ட் திரைப்படம் 40 முதல் 50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரபு, நாசர், விவேக், யோகி பாபு, ஊர்வசி ரவுத்தேலா, கீத்திகா, ராய் லக்‌ஷ்மி, யாஷிகா ஆனந்த், விஜயகுமார், லதா, சுமன் என பெரும் நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது.

    முதல் நாள் வசூல்

    முதல் நாள் வசூல்

    பான் இந்திய திரைப்படமாக 5 மொழிகளில் வெளியான தி லெஜண்ட் திரைப்படம் முதல் நாளில் தமிழ்நாடு முழுவதும் 1.5 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளதாகவும், உலகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக முதல் நாளில் 2 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வார இறுதி நாட்களில் தி லெஜண்ட் படத்துக்கு வரும் வசூலை பொறுத்துத்தான் அதன் வெற்றித் தோல்வி முடிவாகும் என்கின்றனர்.

    கங்கனா படத்தை விட

    கங்கனா படத்தை விட

    40 முதல் 50 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு முதல் நாளிலேயே 2 கோடி வசூலை இந்த படம் ஈட்டியுள்ளது. பாலிவுட்டில் கங்கனா ரனாவத் நடிப்பில் 80 கோடி பட்ஜெட்டில் வெளியான தாகத் திரைப்படம் முதல் நாளில் வெறும் 40 முதல் 50 லட்சம் மட்டுமே வசூல் ஆனது. ஒட்டுமொத்தமாகவே 3 கோடி வரை தான் வசூல் செய்து டிசாஸ்டர் ஆனது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The Legend movie Budget and Day 1 Box Office Collection reports are here. Legend Saravanan's debut movie got mixed reviews from fans and critics.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X