இரண்டாவது வாரத்திலும் கலக்கும் தி லெஜண்ட்.. சந்தோஷத்தில் லெஜண்ட் சரவணன்.. காரணம் இதுதான்!
சென்னை: லெஜண்ட் சரவணன் தயாரித்து நடித்துள்ள தி லெஜண்ட் திரைப்படம் ஒரு நாள் கூட தியேட்டரில் ஓடாது என விமர்சிக்கப்பட்ட நிலையில், இரண்டு வாரங்களை அந்த படம் கடந்துள்ளது அண்ணாச்சியை ரொம்பவே ஹேப்பி ஆக்கி உள்ளது.
அவரது முயற்சியையும் சினிமா மீது அவருக்கு இருக்கும் ஆசையையும் வெளிப்படுத்தும் விதமாக பெரிய பொருட்செலவில் தி லெஜண்ட் படத்தை உருவாக்கினார்.
இயக்குநர்கள் ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் வெளியான இந்த படத்தின் மூலம் பாலிவுட் நடிகையான ஊர்வசி ரவுத்தேலா தமிழ் திரையுலகில் அறிமுகமாகி உள்ளார்.

லெஜண்ட் சரவணன் அறிமுகம்
கலவையான விமர்சனங்கள், ட்ரோல்களுக்கு மத்தியில் தி லெஜண்ட் மூலம் லெஜண்ட் சரவணன் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி உள்ளார். தொடர்ந்து அடுத்த அடுத்த படங்களிலும் நடிக்க முன்னணி இயக்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் லெஜண்ட் சரவணன். 40 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் தொடர்ந்து தியேட்டரில் ஓடிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது வாரம்
லெஜண்ட் சரவணன், ஊர்வசி ரவுத்தேலா, கீத்திகா, யாஷிகா ஆனந்த், ராய் லக்ஷ்மி, விவேக், யோகி பாபு, சுமன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள தி லெஜண்ட் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக இரண்டாவது வாரமும் ஓடிக் கொண்டிருப்பது லெஜண்ட் சரவணனை ரொம்பவே ஹேப்பி ஆக்கி உள்ளது.

பத்திரிகையாளர்களுட சந்திப்பு
ஹைதராபாத், சென்னை என பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார் லெஜண்ட் சரவணன். மேலும், ரசிகர்கள் காட்டிய ஆதரவையும் அன்பையும் பார்த்து அடுத்து அடுத்து பான் இந்தியா படங்களை தயாரித்து வெளியிட திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மீண்டும் ஜேடி ஜெர்ரியே இயக்குவார்களா? அல்லது வேறு இயக்குநர்கள் இயக்கத்தில் அவர் நடிப்பாரா என்பது விரைவில் தெரியவரும்.

ரசிகர்கள் கருத்து
கடந்த வெள்ளிக்கிழமை தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் எல்லாம், ரசிகர்களை ஏன் தான் தியேட்டருக்கு சென்றோமோ என ஆக்கி விட்டது. படத்தை எடுக்கச் சொன்னால், பெரிய நடிகர்களின் ரெஃபரன்ஸ்களை வைத்தே ஓட்டி விடலாம் என நல்ல நடிகர்களை இயக்குநர்கள் வீணடித்த கூத்துகளை பார்த்த ரசிகர்கள், இதுக்கு தி லெஜண்ட் படத்தையே இன்னொரு தடவை பார்க்கலாம். என கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











