வாகன அணிவகுப்பு..ஹீரோ லுக்..கதாநாயகிகளுடன் மாஸ் என்ட்ரி.. அண்ணாச்சியின் கேரள விசிட்!

சென்னை : தி லெஜண்ட் திரைப்படத்தின் புரோமோஷன் பணிகள் படு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

முதல் படத்திலேயே முன்னணி நடிகர்களே மிரட்டுபோகும் அளவுக்கு ஒவ்வொரு ஊருக்கும் நேரடியாக சென்று புரோமோஷனை மிகவும் பிரம்மாண்டமாக நடந்தி வருகிறார் லெஜண்ட் சரவணன்.

லெஜண்ட் சரவணன்

லெஜண்ட் சரவணன்

சரவணா ஸ்டோரின் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் "தி லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் தனது அறிமுகத்தை கொடுக்க உள்ளார். இந்தப் படத்தில், பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌதாலா கதாநாயகியாக தமிழில் அறிமுகமாக உள்ளார். இப்படத்தில் மறைந்த நடிகர் விவேக், மயில்சாமி, பிரபு, நாசர், சச்சு, ரோபோ சங்கர், யோகிபாபு, ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஹிட் பாடல்கள்

ஹிட் பாடல்கள்

ஹரிஸ் ஜெயராஜ் இசையில் ஒவ்வொரு பாடலும் சும்மா தரமாக உள்ளது. இப்படத்தில் 'வாடி வாசல்' என்ற பாடலுக்கு லட்சுமி ராயுடன் அவர் போட்ட குத்தாட்டம் வேற லெவில் வரவேற்பை பெற்றது. அதே போல யாஷிகா ஆனந்துடன் மொசலோ மொசலு பாடலுக்கு செம ஸ்டேப் போட்டு மிரட்டி உள்ளார் லெஜண்ட் சரவணன். இந்த பாடல் யூடியூபில் சாதனை படைத்து வருகிறது.

வயது என்பது

வயது என்பது "ஜெஸ்ட் நம்பர் "

தி லெஜண்ட திரைப்படம் இரு தினங்களில் திரையரங்கில் வெளியாக உள்ள நிலையில் புரோமோஷன் பணியையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் லெஜண்ட் சரவணன். ஆந்திராவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழ், தெலுங்கு,இந்தி என அனைத்து மொழிகளிலும் பேசி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய சரவணன், வயது என்பது "ஜெஸ்ட் நம்பர் தான்" என்று கூறி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

கேரளாவில் மாஸ் என்ட்ரி

கேரளாவில் மாஸ் என்ட்ரி

இதையடுத்து, மலையாள தி லெஜண்ட் திரைப்படத்தின் புரோமோஷனுக்காக கேரளா சென்ற லெஜண்ட் சரவணனுக்கு ரோஜாப்பூ மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், புல்லட் வண்டியில் தி லெஜண்ட் போஸ்டர் பிரிண்ட் செய்யப்பட்ட டீ ஷர்ட்டை அணிந்து வந்த ரசிகர்களின் படை சூழ, விலை உயர்ந்த சொகுசு காரில் புரோமோஷன் நடைபெறும் இடத்திற்கு வந்தார். அவருக்கு வழிநெடுகிலும் கேரளாவின் பாரம்பரிய முறைப்படி செண்டை மேளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. லெஜண்ட் சரவணனுடன் நடிகை ஊர்வசி ரௌதாலா, ராய் லட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X