என்னது லெஜண்ட் அண்ணாச்சி களத்தில் குதிக்கிறாரா?..தி லெஜண்ட் ரிலீஸ் தேதி அறிவிச்சாச்சு
சென்னை : லெஜண்ட் சரவணன் ஹீரோவாக அறிமுகமாகும் படம் தி லெஜண்ட். அவரே தயாரித்துள்ள இந்த படத்தை விசில், உல்லாசம் படங்களை இயக்கிய ஜெடி- ஜெர்ரி இணைந்து இயக்கி உள்ளனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்தில் லெஜண்ட் சவரணனுக்கு ஜோடியாக ஊர்வசி ரெளதேலா நடித்துள்ளார். இவர்களுடன் நாசர், பிரபு, யோகி பாபு, ரோபோ சங்கர், சிங்கம் புலி, மயில்சாமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் கடைசியாக நடித்த படம் இதுவாகும். இந்த படத்தில் விவேக் படம் முழுவதும் பயணிக்கும் ரோல் என்பதால் அவர் நடித்த சீன்களை வீணாக்காமல், தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அவர் நடித்த சீன்களை அப்படியே பயன்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
சையின்ஸ் ஃபிக்ஷன் படமாக உருவாக்கப்பட்டுள்ள தி லெஜண்ட் படத்தின் ஃபர்ஸ்ட்லுக், ஃபர்ஸ்ட் சிங்கிள், செகண்ட் சிங்கிள், டீசர், டிரைலர் என அனைத்தும் வரவேற்பை பெற்றன. ஃபர்ஸ்ட் சிங்கிளில் யாஷிகா, செகண்ட் சிங்கிளில் ராய் லட்சுமி ஆகியோருடன் ஆட்டம், ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு ஹன்சிகா, தமன்னா, உள்ளிட்ட 10 பிரபல ஹீரோயின்கள் கூப்பிட்டு அசத்தினார் அண்ணாச்சி.
தி லெஜண்ட் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்ட 2 நாட்களில் ஒரு கோடி பார்வைகளை பெற்றது. இது மற்ற டாப் நடிகர்களின் பட டிரைலர்கள் பெற்றதை விட அதிகம். இதனால் தி லெஜண்ட் படம் எதிர்பார்ப்பிற்காகவே பெரிய அளவில் வெற்றி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது
ஜுலை 1 ம் தேதி தி லெஜண்ட் படம் ரிலீசாகும் என முதலில் தகவல் பரவியது. பிறகு படத்தின் ரிலீசை ஜுலை 27 ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று தி லெஜண்ட் படம் ஜுலை 15 ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பான் இந்தியா படமாக இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
தி லெஜண்ட் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனம் வெளியிட உள்ளது. அறிவியலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஊர்வசி மைக்ரோபயாலஜிஸ்ட் ரோலில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் சரியான படங்கள் வருவதில்லை என சமீப காலமாக குறை சொல்லப்பட்டு நிலையில், இந்த படம் நிச்சயம் ஒரு பொழுதுபோக்கு படமாக அமையும் என ரசிகர்கள் பலர் எதிர்பார்த்து வருகின்றனர். யாரும் எதிர்பாராத ஒரு நாள் படத்தின் ரிலீசிற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதால் ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











