Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
அடுத்த படத்திற்கு தயாராகும் லெஜண்ட் அண்ணாச்சி...ஹீரோயின் யாரு?
சென்னை : லெஜண்ட் சரவணன் அண்ணாச்சி நடித்த தி லெஜண்ட் படம் சயின்ஸ் ஃபிக்சன் படமாக எடுக்கப்பட்டிருந்தது. இந்த படம் ஜுலை 28 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது.
ஊர்வசி ரெளதேலா, மறைந்த நடிகர் விவேக், பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. தி லெஜண்ட் படத்தின் டீசர், டிரைலர் ஆகியவற்றிற்கு கிடைத்த வரவேற்பின் அடிப்படையில் பார்த்தால், படத்திற்கு கிடைத்த வரவேற்று சற்று குறைவு தான் என்றே சொல்லலாம்.

ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, 5 மொழிகளில் வெளியிடப்பட்ட தி லெஜண்ட் படம் நிச்சயம், கோலிவுட்டிற்கே அதிர்ச்சி கொடுக்கும் வகையில் மிகப் பெரிய வசூல் சாதனை படைக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் வந்ததும் தெரியாமல், போனதும் தெரியாத நிலை ஏற்பட்டு விட்டது.
இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக, தனது முதல் படத்திற்கு கிடைத்த நெகடிவ் விமர்சனங்களுக்கு அடுத்த படத்தின் மூலம் பதில் சொல்ல லெஜண்ட் சரவணன் அண்ணாச்சி தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது. தனது புதிய படத்திற்காக பல டைரக்டர்களை அழைத்து, அண்ணாச்சி கதை கேட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுனால் விரைவில் தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பை அண்ணாச்சி வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த அதிரடிக்கு ரெடி, முன்னணி டைரக்டர்களிடம் கதை கேட்கும் லெஜண்ட் அண்ணாச்சி: இது கொஞ்சம் மாஸ் தான்
தி லெஜண்ட் படத்திற்கு பிறகு தொடர்ந்து திரையுலகில் தனது பயணத்தை தொடர அவர் முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. லெஜண்ட் சரவணன் அண்ணாச்சிக்கு மட்டுமல்ல, ஊர்வசி ரெளதேலாவிற்கும் தமிழில் தி லெஜண்ட் படம் தான் முதல் படம். இவருக்கு தமிழில் பட வாய்ப்புக்கள் வர துவங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் அண்ணாச்சியின் முதல் படத்தில் ஊர்வசி ரெளதேலா ஹீரோயினாக நடித்தார். தற்போது அடுத்த படத்திற்கு அவர் தயாராகி வருவதால் இந்த படத்தின் டைரக்டர் யார் என்று கூட யாரும் கேட்கவில்லை. மாறாக ஹீரோயின் யார் என்பதை தெரிந்து கொள்ள தான் அதிகமானவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதற்கு காரணம் தி லெஜண்ட் படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவிலேயே 10 க்கும் மேற்பட்ட நாயகிகள் ஒரே மேடையில் அண்ணாச்சியுடன் தோன்றி, ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தனர். படத்தின் பாடல்களிலும் யாஷிகா ஆனந்த், ராய் லட்சுமி, ஊர்வசி என பல நடிகைகள் நடனமாடினர். இதனால் அண்ணாச்சியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற போகும் அந்த நடிகை யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.