ப்ளாப் என்றே தெரியாத லெஜண்ட்.. ‘ஈ’யை கூட ஹிட்டாக்கிய ராஜமௌலியின் சொத்து எவ்வளவு தெரியுமா?
சென்னை: இந்திய சினிமாவின் தலைசிறந்த இயக்குநர்களில் எஸ்.எஸ். ராஜமௌலிக்கு முக்கிய இடமுண்டு. இவரது படங்கள் இதுவரை தோல்வியடைந்ததில்லை. அக்டோபர் 10ந் தேதியான இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது படங்கள் எப்போதும் பிரம்மாண்டமான முறையில் படமாக்கப்படும். படத்தின் ஒவ்வொரு நுணுக்கத்திலும் கவனம் செலுத்தப்படும் என்பதால், அவரது எந்தப் படமும் இதுவரை பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்ததில்லை. 'ஈ'யை கதாநாயகனாக்கி முன்னிலைப்படுத்தி ஹிட்டாக்கிய ராஜமௌலியின் சொத்து மதிப்பு பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்
ராஜமௌலி இயக்கிய ஸ்டூடண்ட் நம்பர் 1 திரைப்படம் 2001 ஆம் ஆண்டு வெளியானது. அவரின் முதல் படத்தில்ஜூனியர் என்.டி.ஆர் கதாநாயகனாக நடித்தார். ₹4 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ₹12 கோடியை வசூலித்து சூப்பர் ஹிட் ஆனது. அதைத்தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு சிம்ஹாத்ரி என்ற படத்தை இயக்கினார். ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் பூமிகா சாவ்லா நடித்த இப்படம் ₹7 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு ₹26 கோடியை வசூலித்து பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. மூன்றாவது படமாக சத்ரபதி படத்தி 2005 ஆம் ஆண்டு இயக்கினார். பிரபாஸ் நடித்த இந்த அதிரடித் திரைப்படம் ₹13 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ₹32 கோடி வசூலித்தது. அடுத்து, 'விக்ரமார்க்குடு' இதில் ரவி தேஜா மற்றும் அனுஷ்கா ஷெட்டி நடித்திருந்தனர். இப்படம், ₹11 கோடியில் தயாரிக்கப்பட்டு ₹30 கோடியை ஈட்டியது.

எஸ்.எஸ். ராஜமௌலி: ஐந்தாவது படமாக 'யமதொங்கா' படத்தை இயக்கினார். ஜூனியர் என்.டி.ஆர், மோகன் பாபு, ப்ரியாமணி ஆகியோர் நடித்த இப்படம் ₹14 கோடி பட்ஜெட்டில் ₹30 கோடி வசூலித்து வெற்றி பெற்றது. அதன் பின், ராம் சரணை வைத்து 'மகதீரா' படத்தை எடுத்தார். ராம் சரண் மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான இப்படம் ₹40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ₹150 கோடி வசூலித்து மிகப்பெரிய சாதனை படைத்தது. இந்த படத்தில் தமிழ், இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
தோல்வியை காணாத இயக்குநர்: 2010 ஆம் ஆண்டு 'மரியாதா ராமண்ணா' என்ற படத்தை இயக்கினார். சுனில் மற்றும் சலோனி அஸ்வானி நடித்த இப்படம் ₹12 கோடியில் உருவாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. நான் ஈ திரைப்படம் 2012 ஆம் ஆண்டு வெளியானது. வினோதமான கதைக்களத்துடன் நானி, சுதீப், சமந்தா ரூத் பிரபு நடித்த இப்படம் ₹40 கோடியில் தயாரிக்கப்பட்டு ₹110 கோடியை வசூலித்தது. அடுத்ததாக 'பாகுபலி: தி பிகினிங்' பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா ஷெட்டி நடித்த பான் இந்திய திரைப்படமாக இப்படம் வெளியானது ₹180 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் ₹650 கோடியை வசூலித்தது. இதைத்தொடர்ந்து 'பாகுபலி 2: தி கன்குளூஷன்' வெளியாக ₹1810 கோடி வசூலித்து இந்திய சினிமாவில் புதிய வரலாற்று சாதனை படைத்தது.
SSMB29: அதைத்தொடர்ந்து, ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்த 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் வெளியானது. ₹550 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு ₹1258 கோடியை வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் பெரும் வெற்றி பெற்றது. இப்படி அடுத்தடுத்த வெற்றிப்படைத்தை கொடுத்து தோல்வியே காணாத இயக்குநராக எஸ்.எஸ்.ராஜமௌலி இருக்கிறார். தற்போது, இவர், அடுத்த படமான 'SSMB29' படத்திற்காக மகேஷ் பாபு மற்றும் பிரியங்கா சோப்ராவுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.
சொத்து மதிப்பு: இன்று பிறந்த நாளை கொண்டாடி வரும் எஸ்.எஸ். ராஜமௌலியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ராஜமௌலி, ஒரு படத்திற்கு 100 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுவதாகக் கூறப்படுகிறது. மேலும், அவரது படங்களின் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கும் அவருக்கு வருகிறது. ஆர்.ஆர்.ஆர் படத்தின் லாபத்தில் சுமார் 70 சதவீதம் அவருக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ராஜமௌலி ஹைதராபாத்தில் 25 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு மாளிகையில் வசித்து வருகிறார். அவரிடம் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள கார்கள் கலெக்ஷனில் உள்ளன. ரோல்ஸ் ராய்ஸ்,பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் வரை பல உயர்தர கார்களை அவர் வைத்துள்ளார். ராஜமௌலியின் நிகர மதிப்பு சுமார் 330 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











