»   »  "குமுதவள்ளி"யைத் தேடப் போனதால்தான் "கபாலி" வீக் ஆனாரா??

"குமுதவள்ளி"யைத் தேடப் போனதால்தான் "கபாலி" வீக் ஆனாரா??

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கபாலி படம் ரஜினி ரசிகர்கள் உள்பட பலருக்கும் ஏமாற்றம் கொடுத்திருந்தாலும் கூட புதிய ரஜினியைப் பார்க்க விரும்பியவர்களுக்கு லட்டு சாப்பிட்டது போலத்தான் இருக்கிறது. அவர்கள் எங்களுக்கு இந்த ரஜினியையும் புடிச்சிருக்குப்பா என்றுதான் கூறுகின்றனர்.

அதேசமயம், "டிப்பிக்கல்" ரஜினி படமாக இது இல்லாமல் போனது எப்படி என்ற ஆய்வுகளும் களை கட்டியுள்ளன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கருத்துக்களைக் கொட்டி வருகின்றனர்.


அந்த வகையில் கபாலி படம் தொய்வாக இருக்கும் பீலிங் வர என்ன காரணம் என்பது குறித்து பலரும் கருத்துக்களைக் கூறி வருகின்றனர். அதிலிருந்து சில...


மனைவியைத் தேட இவ்வளவு சிரமமா?

மனைவியைத் தேட இவ்வளவு சிரமமா?

கபாலி ஒரு பவர் புல் மனிதர். அவரிடம் இல்லாத ஆள் பலமோ, வசதியோ இல்லை. ஆனால் தனது மனைவியைத் தேட அவர் கடுமையாக சிரமப்படுவது போலவும், நீளமாக அந்தக் காட்சிகளை அமைத்ததும்தான் மிகப் பெரிய பலவீனம்.
உயிருடன் இருப்பது கூடவா தெரியாது?

உயிருடன் இருப்பது கூடவா தெரியாது?

கபாலியின் மனைவி குமுதவள்ளி உயிருடன் இருப்பது ஒருவருக்குக் கூடவா தெரியாமல் போய் விட்டது. குறிப்பாக அவரது உயிர் நண்பர்களுக்குக் கூட தெரியாமல் போயிருக்க எப்படி வாய்ப்புள்ளது என்பது பலரின் கேள்வி.


தேடலில் ஏன் குழப்பம்?

தேடலில் ஏன் குழப்பம்?

மேலும் அவரது மனைவி உயிருடன் இருப்பதைத் தெரிந்து வைத்திருந்த நபர் எந்த வகையிலாவது அதை கபாலி காதுக்குக் கொண்டு போயிருக்க முடியுமே. அதில் எப்படி குழப்பம் வந்தது. அதை விட மனைவியைத் தேட கபாலி சிரமப்படுவது போல காட்சிகள் வைத்ததுதான் படத்தை பஞ்சராக்க விட்டது.


இது டான் படமா.. இல்லை மனைவியைத் தேடும் படமா?

இது டான் படமா.. இல்லை மனைவியைத் தேடும் படமா?

படத்தின் தொடக்க்க காட்சிகளைத் தவிர்த்துப் பார்த்தால் பாதிப் படத்திற்கு தனது மனைவியை கபாலி தேடுவது போல இருக்கிறது. இவ்வளவு நீளம் தேவையா. இதைப் பார்க்கவா படத்திற்கு வந்தோம் என்று பலரும் - குறிப்பாக ரஜினி ரசிகர்கள் அலுக்கும் நிலை ஏற்பட்டு விட்டது.


மகளிடம் உற்சாகம்.. மனைவியைத் தேடுவதில் மந்தம்

மகளிடம் உற்சாகம்.. மனைவியைத் தேடுவதில் மந்தம்

அதை விட மனைவி உயிருடன் இருப்பதாக தெரிந்ததும், தனது மகளிடம் வா இப்போதே போகலாம் என்று அவர் துள்ளிக் குதிக்க, எப்படிப்பா உடனே என்று மகள் கேட்க, கபாலி மகளா நீ என்று அவர் கேட்பதிலும் லாஜிக் இடிக்கிறது. கபாலி மகள் என்றால் எல்லாம் நினைத்ததும் முடியும் என்றால் கபாலி மனைவியை கண்டுபிடிக்க மட்டும் ஏன் இவ்வளவு பெரிய இழுவை என்ற கேள்விக்கு ரஞ்சித்தான் பதில் சொல்ல வேண்டும்.


விறுவிறுப்பாக்கியிருக்க வேண்டாமா?

விறுவிறுப்பாக்கியிருக்க வேண்டாமா?

இப்படி ஏகப்பட்ட ஓட்டைகள் படத்தில் இருப்பதால்தான் படம் பெரும் தொய்வைச் சந்தித்து விட்டதாக ரசிகர்கள் உள்பட பலரும் கூறுகின்றனர். அதையெல்லாம் தவிர்த்து காட்சிகளை விறுவிறுப்பாக்கியிருந்தால் நிச்சயம் கபாலி வரலாறு படைத்திருக்கும் என்பது ரசிகர்களின் எண்ணம்.


English summary
Many think that the length of searching Kabali's wife killed the pace of the movie and this should have trimmed, they feel.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil