நயன்தாரா மட்டுமல்ல.. சன்னி லியோன் டூ ஷில்பா ஷெட்டி! வாடகை தாயால் குழந்தைகள் பெற்ற பிரபலங்கள் லிஸ்ட்
சென்னை : நடிகை நயன்தாராவுக்கு வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தை பிறந்துள்ளதால் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டவர்கள் பற்றிய தகவல்களை இணையத்தில் ரசிகர்கள் தேடி வருகின்றனர்
பொதுவாக, கணவனோ, மனைவியோ குழந்தைப் பெற்றுக் கொள்ள முடியாமல் ஏதேனும் உடலில் குறை இருந்தால், திருமணமான 5 வருடங்களுக்குப் பிறகே வாடகைத் தாயை வைத்து குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதி உண்டு.
அதுவும், கடந்த ஜனவரி மாதம் முதல் வாடகைத் தாய் மூலமாக குழந்தைப் பெற்றுக் கொள்வது இந்தியாவில் தடைச் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்ற பிரபலங்கள் யார் யார் என பார்க்கலாமா?

அமீர்கான்
பாலிவுட் நடிகர் அமீர்கான் 2011ம் ஆண்டு திரையுலகில் வாடகைத் தாய் முறையை அறிமுகப்படுத்தினார். நட்சத்திர ஜோடியான அமீர்கான் - கிரண் ராவ் தம்பதியருக்கு ஆசாத் ராவ் கான் என்கிற மகன் வாடகைத் தாய் மூலமாக பிறந்தார். 15 ஆண்டு காலம் இணைந்து வாழ்ந்த இந்த தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாக தற்போது பிரிந்துள்ளனர்.

ஷாருக்கான்
பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் ஷாருக்கானுக்கு ஏற்கனவே ஆரியன் கான் மற்றும் சுஹானா கான் என்ற குழந்தைகள் உள்ளநிலையில், 2013 ஆம் ஆண்டு வாடகைத்தாய் மூலம் ஆப்ராம் என்ற மகனை பெற்றெடுத்தனர்.

சன்னி லியோன்
கவர்ச்சி படங்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகை சன்னி லியோன். இவர் திருமணத்திற்கு பின்பு குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருந்து சில வருடங்கள் கழித்து ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தார். அதன் பின்பு வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொண்டார்.

ஷில்பா ஷெட்டி - ராஜ் குந்த்ரா
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் தொழிலதிபர் ராஜ் குந்த்ரா ஜோடிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதில் முதல் குழந்தையை தானே பெற்றுக்கொண்ட ஷில்பா ஷெட்டி, இரண்டாவது குழந்தையை வாடகைத் தாய் முறையில் பெற்றுக்கொண்டார். கடந்த 2020-ம் ஆண்டு ஷில்பா ஷெட்டிக்கு சமிஷா என்கிற மகள் இந்த முறையில் பிறந்தார்.

பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனாஸ்
2000ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ரா 2018ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகரான நிக் ஜோன்ஸை திருமணம் செய்துகொண்டார். பிரியங்கா சோப்ரா - பாப் பாடகர் நிக் ஜோனாஸ் தம்பதிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மல்டி மேரி என்கிற பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையை அவர்கள் வாடகைத் தாய் மூலம் பெற்றுக் கொண்டார்கள்.


Click it and Unblock the Notifications











