For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  Year Ender 2022 : இந்த ஆண்டு சர்ச்சையில் சிக்கிய நடிகைகள்..பிரபலமானாலே பிரச்சனை தான் போல!

  |

  சென்னை : சினிமா ஓர் வர்ணஜாலம் நிறைந்த மாய உலகம். அதில் எந்த அளவுக்கு பெயரும் புகழும் கிடைக்கிறதோ அதைவிட இருமடங்கு சர்ச்சைக்கும் பஞ்சமே இருக்காது.

  சினிமா தோன்றிய காலம் தொடங்கி இன்று வரை சர்ச்சையிலும், கிசு கிசுவிலும் சிக்கிக் கொள்ளாத நடிகர், நடிகைகளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

  அந்த வகையில் இந்த ஆண்டு சர்ச்சையில் சிக்கி பெரிதும் பேசப்பட்ட நடிகைகள் யார் யார் என்று பார்க்கலாமா ?

  அந்த விஷயத்தை நொறுக்குனதே அஜித் தான்.. சினிமா ரவுண்ட் டேபிளில் பேசிய ராஜமெளலி.. ரசிகர்கள் ஹாப்பி! அந்த விஷயத்தை நொறுக்குனதே அஜித் தான்.. சினிமா ரவுண்ட் டேபிளில் பேசிய ராஜமெளலி.. ரசிகர்கள் ஹாப்பி!

  வாடகைத்தாய் சர்ச்சை

  வாடகைத்தாய் சர்ச்சை

  நீண்ட நாட்களாக காதலித்து வந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி கடந்த ஜூன் மாதம் மகாபலிபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் ஆன நான்கே மாதத்தில் அதாவது அக்டோபர் 9ந் தேதி தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்ததாக அறிவித்துள்ளனர். இதிலிருந்து ,சர்ச்சை கிளம்பியது. 4 மாதங்களில் எப்படி குழந்தை பிறக்கும் என கேள்வி எழுந்தது. இதையடுத்து, 6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும், டிசம்பர் மாதமே வாடகைத்தாய் முறையில் குழந்தைபெற்றுக்கொள்ள ஒப்பந்தம் செய்ததற்கான ஆதாரங்களை சமர்ப்பித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

  திருமண சர்ச்சை

  திருமண சர்ச்சை

  நடிகை அமலா பால், பவீந்தர் சிங் என்பவர் தொல்லை கொடுப்பதாக விழுப்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, பவீந்தர் சிங்கை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், கடந்த 2017ஆம் ஆண்டு பஞ்சாப் முறைப்படி நானும் அமலா பாலும் திருமணம் செய்து கொண்டதாகவும், இருவரும் கடந்த சில வருடங்களாக தம்பதிகளாக வாழ்ந்து வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக அமலா பால் என் மீது புகார் அளித்துள்ளதாக கூறியிருந்தார். அமலா பாலுக்கு ஏற்கனவே ஏ எல் விஜய்யுடன் திருமணமாகி விவாகரத்தான நிலையில், மறைமுகமாக இரண்டாவது திருமணம் செய்துகொண்ட விவகாரம் பேசுபொருளானது.

  நிர்வாணமாக நடிக்கவில்லை

  நிர்வாணமாக நடிக்கவில்லை

  பார்த்திபனின் இரவின் நிழல் உலகளவில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட முதன் நான் லீனியர் படமாகும் இந்த படத்தில் பிரிகிடா, வரலட்சுமி சரத்குமார், ரேகா நாயர், ரோபோ சங்கர் என பலர் நடித்துள்ளனர். இதில் நடிகை பிரிகிடா ஒரு நிர்வாண காட்சியில் நடித்திருந்தார். அதற்காக சமூகவலைத்தளத்தில் பெரும் சர்ச்சையில் சிக்சினார் பிரிகிடா. இதையடுத்து, நான் நிர்வாணமாக நடிக்கவில்லை, தோலைப் போன்ற எலாஸ்டிக் கொண்ட ஸ்கின் கலர் டாப் அணிந்திருந்ததாக பிரிஜிடா விளக்கியுள்ளார். அதன் பிறகே சர்ச்சை ஓய்ந்தது.

  பணத்துக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவியா?

  பணத்துக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவியா?

  அதேபோல இரவின் நிழல் படத்தில் நடிகை ரேகா நாயர், அரை நிர்வாணமாக அடித்திருந்தார். அதாவது ஒரு பக்க மார்பகத்தை காட்டி நடித்திருந்தார். இதனால், ரேகா நாயர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பரவின. இதையடுத்து நடிகை ரேகா நாயர், கலையை கலையாக பார்க்க வேண்டும். நான் இப்படத்தில் அரை நிர்வாணமாக நடித்தால், எனக்கு எந்த அளவு பாராட்டுக்கள் கிடைத்ததோ, அதே அளவு விமர்சனங்களும் வந்தது என்றும், பணம் கொடுத்தா என்ன வேணும்னாலும் பண்ணுவியா என்றும் இணையவாசிகள் கேட்பதாக புலம்பினார்.

  கணவர் மீது புகார்

  கணவர் மீது புகார்

  சின்னத்திரை நடிகை திவ்யா தனது காதல் கணவர் அர்ணவ் தன்னை அடித்து துன்புறுத்துவதாக புகார் அளித்து சர்ச்சையில் சிக்கினார். கேளடி கண்மணி சீரியலில் அர்ணவ்வுடன் இணைந்து நடித்தபோது காதலித்ததாகவும், கடந்த 5வருடங்களாக லிவ்விக் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாகவும், சமீபத்தில் அர்ணவ் என்னை திருமணம் செய்து கொண்டேன். ஆனால், கடந்த சில நாட்களாக செல்லம்மா தொடரில் நடிக்கும் நடிகையுடன் தொடர்பில் இருப்பதால், தன்னை அடித்து துன்புறுத்துவதாக புகார் கூறி இணையத்தில் பெரும் புயலை கிளப்பி இருந்தார்.

  English summary
  Nayanthara, amala paul, Rekha Nair controversial celebrities of 2022
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X