மதராஸி முதல் காதி வரை.. வெள்ளிக்கிழமை தியேட்டரில் வெளியாகும் படங்கள் என்னென்ன?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14ந் தேதி தியேட்டரில் வெளியானது. லோகேஷ் கனராஜ் இயக்கத்தில், அனிருத்தின் இசையில் தியேட்டரில் வெளியான இந்த படத்திற்கு பின் எந்த படமும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வெளியாகவில்லை. தற்போது செப்டம்ர் 5ந் தேதி தியேட்டரில் வெளியாக படங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

மதராஸி: தீனா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஏ.ஆர். முருகதாஸ், ரமணா, கஜினி, துப்பாக்கி, ஏழாம் அறிவு, கத்தி, சர்கார் என வெற்றிப்படத்தை கொடுத்து தமிழ்சினிமாவின் முன்னணி இயக்குநராக இருக்கிறார். அவரின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் மதராஸி. இதில் ருக்மணி வசந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படம் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகிறது.

பேட் கேர்ள்: இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் கம்பெனி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பேட் கேர்ள்'. அஞ்சலி சிவராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மி ரெட்டிபள்ளி ஆகியோர் நடித்துள்ளனர். 'பேட் கேர்ள்' படத்தின் டீசர் வெளியான போதே அந்த டீசரில் இருந்த சில கருத்துக்களால் படம் பெரும் சர்ச்சையில் சிக்கியது.

Theatres Releae movies Madharaasi Bad Girl
Photo Credit:

காந்தி கண்ணாடி: விஜய் தொலைக்காட்சியின் பிரபல நகைச்சுவை நிகழ்ச்சியான கலக்கப்போவது யாரு? மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமான பாலா, தற்போது காந்தி கண்ணாடி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இப்படம் செப்டம்பர் 5ந் தேதி வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது. படத்தை இயக்குநர் ஷெரிஃப் இயக்கியுள்ளார். இப்படத்தின் ஆதிமூலம் கிரியேஷன்ஸ் சார்பில் ஜெய் கிரண் தயாரிக்க, விவேக் - மெர்வின் இசையமைக்க, பாலாஜி கே.ராஜா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பாலா நாயகனாக நடிக்க, நாயகியாக நமிதா கிருஷ்ணமூர்த்தி நடித்துள்ளார். மேலும், இவர்களுடன் இயக்குநர் பாலாஜி சக்திவேல் மற்றும் அர்ச்சணா, நிகிலா சங்கர், ஜீவா சுப்பிரமணியன், அமுதவாணன், மனோஜ் பிரபு, மதன் உள்ளிட்ட பலர் நடிதுள்ளனர்.

காதி: தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்த நடிகையாக நடிகை அனுஷ்கா இருக்கிறார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற "Miss ஷெட்டி MR பொலிஷெட்டி" திரைப்படம் இந்த படத்தை தொடர்ந்து அனுஷ்கா காதி (Ghaati) என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கிரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ளார். இப்படத்தின் மூலம் நடிகர் விக்ரம் பிரபு தெலுங்கில் அறிமுகமாகிறார். இந்த திரைப்படமும் வரும் 5ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.

பாகி 4: பாலிவுட்டின் அதிரடி ஆக்‌ஷன் நடிகர்களான டைகர் ஷ்ராப் மற்றும் சஞ்சய் தத் இணைந்து நடித்துள்ள திரைப்படமாக 'பாகி 4'. இந்த படத்தை சாஜித் நதியாட்வாலா எழுதி தயாரித்திருக்கிறார். ஹர்ஷா இயக்கி உள்ள இந்த படத்தில், ஹர்னாஸ் சந்து, சோனம் பாஜ்வா, ஷ்ரேயாஸ் தல்பதே, சௌரப் சச்தேவா,உபேந்திர லிமாயே உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். 'பாகி 4' வரும் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதே தேதியில் விவேக் அக்னிஹோத்ரியின்'தி பெங்கால் பைல்ஸ்' படமும் வெளியாக உள்ளது.

வரும் 5ந் தேதி தமிழ் மட்டும் நான்கு திரைப்படம் வெளியாக உள்ளது. இதில், சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் மதராஸி திரைப்படம் அதிக வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல, பேட் கேர்ள் திரைப்படம் படத்தின் டீசர் வெளியான போதே பெரும் சர்ச்சையில் சிக்கியதாலும், வெற்றி மாறனின் தயாரிப்பு என்பதாலும்,இந்த படத்திற்கு என்று தனி ரசிகர்கள் இருப்பார்கள். இதனால், இந்த இரண்டு படங்களுக்கும் பாக்ஸ் ஆபிஸில் பெரிய போட்டி காத்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X