ஆர்யனை அறிமுகபடுத்தி பிறந்தநாள் வாழ்த்து கூறிய லைகா நிறுவனம்

மாஃபியா படத்தில் அருண் விஜயின் கதாபாத்திரத்தின் பெயர் ஆர்யன்.

இயக்குனர் கார்த்திக் நரேன் இயகத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் 'மாஃபியா'. இந்த படத்தை லைகா நிறுவனத்தின் மூலம் சுபாஸ்கரன் தயாரித்து வருகிறார். நேற்று அருண் விஜய் பிறந்த நாளை ஒட்டி அருண் விஜய் கதாபாத்திரம் குறித்த தகவலை தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. மாபியா படத்தில் அருண் விஜயின் பெயர் 'ஆர்யன்' என்று கூறப்பட்டிருக்கிறது. அதனுடன் அருன் விஜய் துப்பாக்கியுடன் இருக்கும் ஒரு போஸ்டரையும் வெளியிட்டிருக்கிறது லைகா நிறுவனம்.

The Mafia that turned Arun Vijay into Aryan

படத்தின் படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து தற்போது படத்தின் டப்பிங் வேலைகள் போய் கொண்டு இருக்கிறது, இதனை கொஞ்ச நாட்களுக்கு முன்பு ட்விட்டரில் அருண் விஜய், அவரின் டப்பிங் போது ஒரு புகைப்படத்தை பதிவேற்றி கூறியிருந்தார்.

The Mafia that turned Arun Vijay into Aryan

இயக்குனர் கார்த்திக் நரேனை நமக்கு 'துருவங்கள் பதினாறு' படம் மூலம் தெரியும். 2016ல் ரஹ்மான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த க்ரைம் த்ரில்லர் படம் தான் 'துருவங்கள் பதினாறு'. சில படங்கள் ரிலீஸ் ஆகும் வரை யாருக்கும் தெரியாது, ஆனால் ரிலீஸ்க்கு பின் அனைவராலும் கொண்டாடபடும். அதே போல் சத்தமில்லாமல் ரிலீஸாகி 100 நாட்கள் ஓடிய திரைப்படம் தான் துருவங்கள் பதினாறு. இதற்கு பின் கார்த்திக் நரேன் அரவிந்த்சாமி, இந்தரஜித், ஸ்ரேயா, சுந்தீப், ஆத்மிகா ஆகியோரை வைத்து 'நரகாசூரன்' என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக இருந்த கௌதம் மேனனுக்கும் காரத்திக் நரேனுக்கும் தயாரிப்பு ரீதியான பிரச்சனைகள் ஏற்பட்டது, அதனால் இன்றுவரை படம் வெளியாகவில்லை.

The Mafia that turned Arun Vijay into Aryan

அருண் விஜய் 'என்னை அறிந்தால்' படத்திற்கு பிறகு தொடர்ந்து நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார், அந்த வரிசையில் மாஃபியாவும் இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது. மாபியா தான் தனது சினிமா வாழ்விலே மிக பெரிய வெற்றி படமாக இருக்கும் என்று கூறியிருந்தார் அருண் விஜய். மாஃபியா படத்தில் அருண் விஜயுடன் பிரசன்னா, ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

The Mafia that turned Arun Vijay into Aryan

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X