»   »  சிக்கல் சண்முகசுந்தரத்தையும்… நம்ப மோகனாம்பாவையும் இப்ப பார்த்தா எப்படி இருக்கும்?

சிக்கல் சண்முகசுந்தரத்தையும்… நம்ப மோகனாம்பாவையும் இப்ப பார்த்தா எப்படி இருக்கும்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் சிவாஜியின் நடிப்பையும் பத்மினியின் நாட்டியத்தையும் விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது...

அவுக நாதஸ்வரம் ஊத... இவுக அபிநயம் புடிச்சு ஆட.... அட அட அட அத பாக்குறவங்க கண்ணு நிநைஞ்சு போகுமேப்பா... அந்த கதை இப்போ எதுக்கு என்று கேட்கறீர்களா? இப்போது இணையத்தை கலக்கி வருகிறது மேக்கிங் ஆப் தில்லானா மோகனாம்பாள்.

லுாயிஸ் மேள் என்பவரால் எடுக்கப்பட்ட ஒரு ஆவணப்படத்தில் சென்னையில் தயாராகும் சினிமா என்ற தலைப்பில் எடுக்கப்பட்ட இந்த டாகுமண்டரி படக் காட்சிகள் இப்போது காணக்கிடைப்பது சுவாரஸ்ய அனுபவம்.

நட்சத்திர ஜாம்பவான்கள்

நட்சத்திர ஜாம்பவான்கள்

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் என 1960களில் ஜாம்பவான் ஹீரோக்கள்...பத்மினி, சரோஜாதேவி, காஞ்சனா, கே.ஆர்.விஜயா என கனவுக்கன்னிகளும் கட் அவுட்களில் ஜொலிக்கின்றனர்.

தில்லானா மோகனாம்பாள்

தில்லானா மோகனாம்பாள்

சென்னை சினிமா குறித்த இந்த ஆவணப்படத்தில் தில்லானா மோகனாம்பாள் படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் சுமார் 4 நிமிடங்களுக்கு நகர்கிறது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நாட்டியப் பேரொளி பத்மினி நடித்து, 1969 ல் வெளியான வெற்றிப்படம் 'தில்லானா மோகனாம்பாள்'. இன்றைக்கும் டிவியில் ஒளிபரப்பானால் டி.ஆர்.பி எகிறுகிறது.

நெற்றியில் விழும் சுருள் முடி

நெற்றியில் விழும் சுருள் முடி

இந்த ஆவணப்படத்தில் தற்போது மேக்கிங் ஆஃப் தில்லானா மோகனாம்பாள் இடம்பெற்றுள்ளது. பத்மினி போடும் மேக்அப்... தனது முன் நெற்றியில் அவர் முடியை சுருட்டிவிட அவர் எடுத்துக்கொள்ளும் சிரத்தை... இதேபோல சிவாஜி கணேசனும், அவரது சகாக்களும் போடும் மேக்அப் காட்சிகளும் இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளன.

நல்லா கிளீசரின் போடுங்க

நல்லா கிளீசரின் போடுங்க

நாதஸ்வரம் வாசிக்கும் சிவாஜியை ஜன்னல் ஓரம் நின்று ரசிக்கிறார் பத்மினி. அவரது கண்களில் கண்ணீர் வருகிறது. கிளிசரின் நல்லா போடணும் இன்னொரு டேக் போகலாமா என்று இயக்குநர் கேட்க சட்டென்று ரெடியாகிறார் பத்மினி.

மேக்கிங் ஆஃப் சினிமா

மேக்கிங் ஆஃப் சினிமா

மேக்கிங் ஆஃப் பாகுபலிதான் போடுவீங்களா? நாங்களும் போடுவோம்ல என்று யு டுயூப்பில் போடப்பட்டுள்ள இந்த மேங்கிங் ஆஃப் தில்லானா மோகனாம்பாள் இன்றைக்கும் பலதரப்பட்ட ரசிகர்களை கவர்ந்துள்ளது.

English summary
The documentary series L'inde Fantome (1969) by Louis Malle. The movie set seen in the documentary is that of Thillana Mohanambal which had Sivaji Ganesan as the hero and Padmini as the heroine.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil