»   »  ஆதார் கார்டை வைத்து ஒரு படம் - இது சேட்டன்களின் கலைவெறி!

ஆதார் கார்டை வைத்து ஒரு படம் - இது சேட்டன்களின் கலைவெறி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சின் : மலையாள சினிமாவின் புதுவரவு இயக்குநர்கள் அம்மொழியின் சினிமா மீதான பிம்பங்களை மாற்றி வருகிறார்கள்.

சமகால அரசியலையும், நேட்டிவிட்டியையையும், சமூகப் பிரச்னைகளையும் தங்களது படங்களில் புகுத்தி ரசிகர்களால் கொண்டாடப் படுகிறார்கள் இளம் இயக்குநர்கள்.

இளம் இயக்குநர்களின் கலைத் தாகத்தால் மலையாளத்தில் உருவாகும் சமீபகாலப் படங்கள் தமிழ் உள்ளிட்ட பிறமொழி ரசிகர்கள் மத்தியில் செமையான வரவேற்பைப் பெறுகின்றன.

ட்ரெண்ட் படங்கள் :

ட்ரெண்ட் படங்கள் :

மாட்டுக்கறி தடை தொடர்பான சர்ச்சைகள் கிளம்பும்போதே 'பீப்' கறியை மையமாக வைத்துப் படம் எடுத்து ஹிட் அடிப்பதுதான் மலையாளிகளின் வெற்றி. அப்படி இப்போது அடுத்த அரசியல் பிரச்னையைக் கையில் எடுத்திருக்கிறார்கள் சேட்டன்கள்.

ஆதார் கார்டு சினிமா :

ஆதார் கார்டு சினிமா :

இளம் இயக்குநர் ஓமர் லுலு அடுத்து இயக்கப் போகும் படத்துக்கு 'ஒரு ஆதார் லவ்' என டைட்டில் வைத்துள்ளார். ஆதார் கார்டு கட்டாயம் எனும் மத்திய அரசின் விதிகள் நாடு முழுவதும் பேசப்பட்டு வரும் நிலையில் இப்படி ஒரு டைட்டில் வைத்திருப்பது வெகுவாக ஈர்த்துள்ளது.

ஆதார் காதல் கதை :

ஆதார் காதல் கதை :

ஆதார் கார்டு தரும் சிக்கல்கள், அந்த ஆதார் கார்டினாலேயே காதல் உருவாவது என ஆதார் கார்டை மையப்படுத்தி ரொமான்ஸ், காமெடி என பொழுதுபோக்குப் படமாக இதன் கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.

எதிர்பாராத ஹிட் :

எதிர்பாராத ஹிட் :

மலையாள சினிமாவில் கடந்த வருடத்தின் 'சர்ப்ரைஸ் ஹிட்' என வர்ணிக்கப்பட்ட படம் 'ஹேப்பி வெட்டிங்'. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு செமத்தியாக கல்லா கட்டியது இந்தப் படம். அதைத் தொடர்ந்து இந்த வருடம் 'சங்க்ஸ்' என்கிற படத்தையும் ரிலீஸ் செய்து ஹிட் அடித்தார் ஓமர் லுலு. இதனால், அடுத்த படத்தின் மீதும் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

முற்றிலும் புதுமுகங்கள் :

முற்றிலும் புதுமுகங்கள் :

முற்றிலும் புதுமுகங்களை வைத்து உருவாகும் 'ஒரு ஆதார் லவ்' படத்தில் நடிக்க நான்கு புதுமுக ஹீரோக்களை தேடிக்கொண்டு இருக்கிறார் இயக்குனர் ஓமர் லுலு. இதற்கான ஆடிஷன் வரும் செப்டம்பர் 27-ல் நடைபெற இருக்கிறது.

English summary
Recent films in Malayalam are welcomed by other language fans. In this situation, Omar Lulu is directing 'An Adaar Love' movie focusing on Aadhaar Card.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil