ஸ்க்ரிப்ட் இல்லை.. ரீ டேக் இல்லை.. வாழ்க்கை உள்ளபடியே.. வியக்க வைக்கும் ‘கொசு தத்துவம்’ டிரைலர்!

சென்னை: சினிமாத்தனம் இல்லாமல் சினிமா எடுப்பது ஒரு சிறந்த கலை. ரியாலிட்டியா இருக்குப்பா படம் மாதிரியே தெரியல என பாராட்டினால் தான் அந்த படத்திற்கு தேசிய விருது முதல் ஆஸ்கர் விருது வரை கிடைக்கும்.

கமர்ஷியலாக எடுத்து காசு பார்க்க வேண்டும் என நினைக்காத நல்ல கலையுள்ளம் கொண்ட இயக்குநர்களால் மட்டுமே இது போன்ற சினிமாக்களை எடுக்க முடியும்.

இந்நிலையில், நிஜத்தின் ஆணி வேரை தேடி வெறும் 6 மணி நேரத்தில், ஸ்க்ரிப்ட் இல்லாமல், ரீ டேக் எடுக்காமல், வாழ்க்கையை உள்ளபடியே கேமராக் கோணங்களை மட்டுமே மாற்றி எடுத்த 'The Mosquito Philosophy' படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

லென்ஸ் பட இயக்குநர்

லென்ஸ் பட இயக்குநர்

படுக்கையறை காட்சிகள் வெட்ட வெளிச்சமாக எப்படி வருகிறது. சைபர் கிரைம் குற்றங்கள் எதனால் நடக்கிறது என்பதை வெட்ட வெளிச்சமாக காட்ட லென்ஸ் எனும் படத்தை இயக்கி பாராட்டுக்களையும் விருதுகளையும் குவித்த இயக்குநர் ஜெயப்பிரகாஷ் தான் இந்த ‘The Mosquito Philosphy' எனும் அருமையான படத்தை இயக்கி உள்ளார்.

நிஜ மனிதர்கள்

நிஜ மனிதர்கள்

இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன், அவரது மனைவி சிந்து ஜெயப்பிரகாஷ், பிரதீப் தாமோதரன், ரவி கதிரேசன், சுரேஷ் சோமசுந்தரம் குமார் மற்றும் அனுஷா பிரபு என நிஜ மனிதர்கள் அப்படியே கதை மாந்தர்களாக வாழ்ந்துள்ளனர். ஹீரோவாக சுரேஷ் நன்றாகவே நடித்துள்ளார். தென்பாண்டி சீமையிலே பாடல் எல்லாம் வேற லெவல்.

என்ன கதை

கொசு தத்துவத்தை வைத்து வெறும் 6 மணி நேரத்தில் 5 கதாபாத்திரங்களை கொண்டு, ஒரு வீட்டுப் பார்ட்டியில் நடக்கும் வாழ்க்கை சுவாரஸ்யங்களும், தலை நரைத்த சுரேஷ் தனக்கு சீக்கிரம் நடக்கப் போகும் திருமண சர்ப்ரைஸை நண்பர்களிடம் பகிர, இளம் வயது பெண்ணையா? திருமணம் செய்து கொள்ளப் போகிறாய் என நண்பர்கள் கூற, கடைசியில் என்ன ஆகிறது என்பது தான் The Mosquito Philosophy.

டிரைலர் ரிலீஸ்

நவம்பர் ஒன்றாம் தேதியான இன்று முபி ஒடிடி தளத்தில் இந்த படம் ரிலீசாகி உள்ளது. படத்தை புரமோட் செய்யும் விதமாக நடிகரும் இயக்குநருமான சமுத்திரகனி தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், The Mosquito Philosophy படத்தின் வியக்கவைக்கும் டிரைலரை வெளியிட்டுள்ளார். ஒவ்வொரு ஃபிரேமும் வாழ்க்கையை காட்டுகிறது. வாழ்த்துக்கள் ஜேபி!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X