»   »  மெர்சலுக்கு போட்டியாக துள்ளி வரும் படம் - தயாரிப்பாளர் அறிவிப்பு

மெர்சலுக்கு போட்டியாக துள்ளி வரும் படம் - தயாரிப்பாளர் அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : தீபாவளிக்கு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'மெர்சல்' படம் வெளியாகிறது. ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளிவரும் இப்படம் ஃபெஸ்டிவல் கலெக்‌ஷனை அள்ளும் எனக் கருதப்படுகிறது.

'மெர்சல்' படத்திற்குப் போட்டியாக, முத்தையா இயக்கத்தில் சசிகுமாரின் 'கொடிவீரன்' படம் வரவுள்ளது. மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிரிபார்ப்பு உள்ளதால் மற்ற தயாரிப்பாளர்கள் தீபாவளிக்கு வெளியிடுவதை தவிர்த்து வருகின்றனர்.

The movie will be released with mersal - producer announced

இந்நிலையில் தீபாவளி ரேஸில் வைபவ் நடிக்கும் 'மேயாத மான்' படம் இணைந்துள்ளது. 'மெர்சலான காளை வருதுங்க! கூடவே... துள்ளி மானும் வருதுங்க!' என புதிய போஸ்டரில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

'காதல் முதல் கல்யாணம் வரை' சீரியல் நடிகை ப்ரியா பவானி ஷங்கர் நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ளார். ரத்னகுமார் என்பவர் இயக்கியுள்ளார்.

English summary
Due to the big rivalry among fans of 'Mersal', other producers are avoiding releasing films for Diwali. In this situation, Vaibhav and Priya Bhavani Shankar's 'Meyaadha Maan' movie enters diwali race.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil