twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மீண்டும் வந்த மம்மி... டம்மியா டாப்பா?

    By Shankar
    |

    ஹாலிவுட்டைப் பொறுத்தவரைக்கும் ஒரு படம் மிகப் பெரிய வெற்றியடைஞ்சிட்டா மக்கள் சலிச்சிப் போயி போதும்ப்பா சொல்ற அளவுக்கு அடுத்தடுத்த பாகங்கள் எடுத்து எடுத்தே கொண்ணுருவாங்க. அந்த வியாதிதான் இப்ப கொஞ்சம் கொஞ்சமா நம்மூர்லயும் பரவி சிங்கங்களையும் முனிக்களையும் பாத்து 'யப்பா சாமி ஓட்டுனது போதும்டா ரீலு அந்து போச்சு'ங்குற அளவுக்கு சொல்ல வச்சிருக்கு.

    ஏற்கனவே மம்மிக்களை வைச்சி நிறைய படங்கள் வந்திருந்தாலும், 1999 ல ஸ்டீஃபன் சம்மர்ஸால் எடுக்கப்பட்ட 'தி மம்ம' மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. 'ஹமுனாபுத்ரா'ங்குறா ஒரு நகரைக் கண்டுபிடிச்சி அதுல சில ஆயிரம் வருஷங்களாக தூங்கிட்டி இருந்த மம்மிய இவனுங்க தண்ணி தெளிச்சி எழுப்பி விட்டுட, அடுத்து அது என்னென்ன அட்டகாங்கள் பன்னுதுங்குறதுதான் 1999ல வெளிவந்த தி மம்மி.

    The Mummy (2017)

    மணல் புயல், ஒரு முழு மனிதனை ஒரு நொடியில கடிச்சித் திங்கிற பூச்சிகள், பாதி உடலோடு சண்டை போடுற மம்மிக்கள், மொட்டைத் தலை வில்லன்னு நிறைய விஷயங்கள் மக்களை கவர்ந்துச்சி. வெளியிடப்பட்ட அனைத்து மொழிகளிலுமே அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடைஞ்சிது. அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட, ராக் நடித்த 'தி மம்மி ரிட்டர்ன்ஸ்', ஜெட்லி வில்லனாக நடித்த 'ட்ராகன் எம்பயர்' போன்ற அடுத்தடுத்த பாகங்கள் முதல் பாகத்தின் அளவுவுக்கு வரவேற்பைப் பெறல.

    அப்படியிருக்க ஆக்‌ஷன் கிங் டாம் க்ரூஸ் மற்றும் ரசல் க்ரோவ் நடிப்பில வெளிவந்துருக்கு ஒரு புது மம்மி. ஏம்பா டாம் குரூஸூக்கும் மம்மிக்கும் என்னப்பா சம்பந்தம்னு கேப்பீங்க.. சம்பந்தம் இல்லைதான்... ஆனா சம்பந்தப் படுத்திக்கிட்டeதன் சோறு போடுவாய்ங்க..

    பழைய மம்மிக்கும் இப்ப வந்திருக்கிற புது மம்மிலயும் கதையில ஒண்ணும் பெருசா வித்யாசமெல்லாம் இல்லை. 5000 வருஷத்துக்கு முன்னால ஆஹ்மெட்ன்னு ஒரு இளவரசி, அவங்க அப்பாவுக்கு ரெண்டாந் தாரம் வழியா ஒரு குழந்தை பிறந்த உடனே, எங்க ஆட்சி நமக்கு கிடைக்காதோங்குற பயத்துல அப்பா, சித்தி அவங்க கொழந்தை எல்லாரையும் மட்டை பண்ணிடறா. ஆஹ்மெட் தன்னோட லவ்வரையும் பலி கொடுத்துட்டா, தீய சக்திகளோட கடவுள் மூலமா அழிக்கமுடியாத மாபெரும் சக்தியா மாறிடலாம்னு முடிவு செஞ்சி அவன பலி கொடுக்கப் போகும்போது, ஜஸ்ட் மிஸ்ஸு. அதுக்குள்ள அரண்மனை காவலாளிகள் வந்து இவளப் புடிச்சி மம்மி ஆக்கிடுறானுங்க. சார் தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க.. நீங்க நினைக்கிற மம்மி இல்லை. இது எகிப்து மம்மி!

    அவ ஒரு தீயசக்திங்குறதால சனியன ஊருக்குள்ளயே வச்சிருக்கக் கூடாதுன்னு, எகிப்துலருந்து ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்புறம் உள்ள மெசபடோமியால, வெளிலயே வரமுடியாதபடி பாதுகாப்பா பொதைச்சிடுறானுங்க.

    அப்புறம் என்ன, நிகழ்காலத்துல நம்ம டாம் குரூஸூம் அவரோட லவ்வரும் அந்தப் புள்ளைய பொதைச்ச இடத்தத் தோண்டி அத எழுப்பி விட்டுருவாங்க. அது போறவன் வர்றவனையெல்லாம் புடிச்சி கடிச்சி வைக்கும். கடைசில அதை எப்புடி அழிக்கிறாங்கன்றதுதான் க்ளைமாக்ஸ்.

    'திமிங்கலம்.. செத்துப்போன ஆஹ்மெட்ட மம்மியாக்கி நீ பொதைச்சி வைய்யி... மண்டை கசாயம் பொதைச்சி வச்ச மம்மிய நீ தோண்டி வெளில எடுத்து வய்யி... பேயி.. நீ தோண்டி எடுத்த மம்மிய மறுபடியும் கொன்னு பூமிக்குள்ளயே பொதைச்சி வெய்யி..'

    'ஏன் சார் பேசாம அந்த மம்மி பொதைச்ச எடத்துலயே இருந்துருக்கலாமே..'

    'இருந்துருக்கலாம்தான்.. அப்புறம் புரோடியூசர்கிட்ட வாங்குன காசுக்கு எப்புடி படம் எடுக்குறது?'

    படம் பாக்கும்போது தானாவே இந்த டயலாக்ஸ் உங்க மண்டைக்குள்ள ஓடும்!

    The Mummy (2017)

    மம்மி பொட்டிக்குள்ளருந்து வெளில வந்தப்புறம் திடீர்னு கை தனியா கால் தனியா ஆட்டி ஒரு மைக்கல் ஜாக்சன் ஸ்டெப்பு ஒண்ணு போட்டுச்சி. நான்கூட ஓ பேயி மைக்கேல் ஜாக்சன் ஃபேன் போலன்னு நினைச்சிட்டேன். அப்புறம்தான் தெரியிது பேயோட நடக்குற ஸ்டைலே அப்புடித்தான்னு.

    படத்துல ஒரு ஃப்ளைட் க்ராஷ் ஆகுற சீன் ஒண்ணு எடுத்துருக்கானுங்க. சூப்பரா எடுத்துருந்தாங்க. 3Dல பாக்கும்போது நமக்கே அடிவயிறு கலங்கிருச்சி ஒரு நிமிஷம். நம்ம மம்மி பாக்குறோமா இல்லை மிஷன் இம்பாஸிபிள் பாக்குறோமான்னு கொயப்பமாயிருச்சி!

    அதுவும் ஆங்கிலப் படங்கள்னா நம்ம ஆட்கள் தியேட்டர்ல அடிக்கிற கூத்துக்கு அளவே இருக்காது. ஒரு காட்சில 'சார் இங்க ஒரு பாடி இருக்கு'ன்னு ஒருத்தன் சொல்லுவான். உடனே தியேட்டர்ல இருந்த ஒருத்தன் 'அப்டியே என்ன சைஸுன்னு பாத்து சொல்லுப்பா'ன்னு கமெண்ட் அடிக்க தியேட்டரே சிரிச்சிது.

    கதையிலயும் பெரிய மாற்றம் இல்லை. பழைய மம்மில ஆம்பளை மம்மி. இங்க லேடீஸ் மம்மி. அதுவும் அந்தப் பொண்ணு பாக்க அப்டியே நம்ம ஓவியா சாயல்ல இருக்கு. டாம் குரூஸ் எத்தனை படத்துல எத்தனை பேர போட்டு வெளுத்து எடுத்துருப்பாரு. எல்லாத்துக்கும் சேத்து இந்தப் படத்துல மம்மி அவரப் போட்டு வெளுக்குது. தூக்கிப் போட்டு பந்தாடுது. எல்லாத்தையும் வாங்கிட்டு நம்மாளு வலிக்குதா? ப்ச் ப்ச்.. லைட்டான்னு தொடைச்சிட்டு போய்ட்டே இருக்காப்ள. ரசல் க்ரோவ் ரொம்ப சாதாரண ஒரு பாத்திரத்தில் வந்துட்டு போறாரு.

    மம்மியைக் கண்டறியும் குகைக் காட்சி, மம்மி உயிர்த்தெழும் காட்சி, விமான விபத்துக் காட்சின்னு அங்கங்க ஒண்ணு ரெண்டு விஷங்கள் நல்லா இருக்கு. மத்தபடி பெருசா சுவாரஸ்யப் படுத்துற அளவு சிறப்பா எதுவும் இல்ல!

    - முத்து சிவா

    English summary
    Review of The Mummy (2017) Hollywood movie .
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X