கபாலி, 36 வயதினிலே, இறுதிச்சுற்று படங்களில் பங்கேற்ற சுயாதீன இசைக் கலைஞர் ஷியாமளாங்கன்!
ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த புலம் பெயர் ஈழ இசைக் கலைஞர் ஷியாமளாங்கன் இசையில் தயாரான 'ராசாத்தியே...சுயாதீனப் பாடலின் காணொலி வெளியிடப்பட்டிருக்கிறது.
'ராசாத்தியே...' எனத் தொடங்கும் இந்தப் பாடலை, ஷங்கர் மகாதேவன் பாடியிருக்கிறார். இவருடன் ராப் இசைக் கலைஞர் ரத்யா, ராப் பாடல் வரிகளை எழுதி பாடியிருக்கிறார். இந்தப் பாடல் அண்மையில் இணையத்தில் வெளியாகி இசை ரசிகர்களின் ஆதரவு பெற்றுள்ளது.

இந்தப் பாடலை இலங்கையைச் சேர்ந்த பாடலாசிரியர் ரெட்டை பாதை சேகர் மற்றும் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் ஆகியோர் இணைந்து எழுதி இருக்கிறார்கள். பத்து ஆண்டுகளுக்கு முன் அழகிய 'தென்றலே..' என தொடங்கிய இந்தப் பாடல், தற்போது நவீன இசை வடிவத்திற்கு ஏற்ப மாற்றம் பெற்று 'ராசாத்தியே..: எனத் தொடங்குகிறது.
சுயாதீனப் பாடல் ஒன்றிற்கு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே பாடலை, சில புதிய இசை வடிவத்துடன் இணைந்து வழங்குவது என்பது தமிழ் மொழியிலான சுயாதீன இசையுலகில் புதிது. இதனால் இந்தப் பாடலுக்கும், பாடலுக்கு இசையமைத்த இசைக்கலைஞர் ஷியாமளாங்கனுக்கும் பாராட்டுகள் பல தரப்பிலிருந்து குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











