For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சத்தமே இல்லாமல் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் டீசர்.. உச்சகட்ட சந்தோஷத்தில் ரசிகர்கள்!

  |

  மும்பை: பாலிவுட்டில் ஏகப்பட்ட பிரச்சனைகள் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், சத்தமே இல்லாமல் பிக்பாஸ் சீசன் 14-ன் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.

  Bigg Boss 4 Telugu Official Promo • Nagarjuna

  கொரோனா லாக்டவுனில் தனது பண்ணை வீட்டில் விவசாயம் பார்த்து வரும் நடிகர் சல்மான் கான், அதிலிருந்து மாறி பிக்பாஸின் அடுத்த சீசனுக்காக தயாரான வீடியோவையே டீசராக வெளியிட்டுள்ளனர்.

  கலர்ஸ் தொலைக்காட்சியில் வெளியாகவுள்ள இந்த டீசர் தற்போது பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

  அதுக்குச் சரிபட்டு வருவாரா..? அனுஷ்காவின் மெகா ஹிட் படமான 'அருந்ததி' ரீமேக்கில் இந்த ஹீரோயினா?

  சல்மான் கான் வழங்கும் பிக்பாஸ்

  சல்மான் கான் வழங்கும் பிக்பாஸ்

  வெளிநாடுகளில் பிரபலமான பிக் பிரதர் நிகழ்ச்சி, இந்தியாவில் பிக்பாஸ் என்ற பெயரில் வெளியாகி கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் ஆகின்றன. இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான் கான் பல ஆண்டுகளாக தொகுத்து வழங்கி வருகிறார். தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கெல்லாம் இதுதான் முன்னோடி

  ஏற்கனவே அப்படித்தான்

  ஏற்கனவே அப்படித்தான்

  இந்த கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்ததில் இருந்து பலரது வீடுகளும் பிக்பாஸ் வீடாகவே மாறி உள்ளது. 100க்கும் மேற்பட்ட நாட்கள் பலரும் இந்த லாக்டவுனில் தங்கள் வீட்டுக்குள்ளே அடைந்து கிடந்து வாழ்வது எப்படி என பழகி விட்டனர். இந்நிலையில், 100 நாட்கள் பல பிரபலங்களை ஒரு வீட்டில் அடைத்து வைத்து சண்டையை மூட்டி விடும் பிக்பாஸ் சீசன் 14 விரைவில் தொடங்க விருக்கிறது.

  பிக்பாஸ் டீசர்

  சல்மான் கான் தனது பண்ணை வீட்டில் விவசாயமும், டிராக்டர் ஓட்டுவதையும் இந்த லாக்டவுனில் செய்து வந்ததையே புரொமோவாக போட்டு பிக்பாஸ் சீசன் 14 டீசரை உருவாக்கி உள்ளனர். தனது லாக்டவுன் தாடியை எல்லாம் க்ளீன் ஷேவ் செய்துவிட்டு, மீண்டும் பழைய லுக்கில் நடிகர் சல்மான் கான் பிக்பாஸ் நிகழ்ச்சியை விரைவில் தொகுத்து வழங்கப் போவதாக அந்த டீசர் உருவாக்கப்பட்டுள்ளது.

  யார்.. யார்?

  யார்.. யார்?

  வரும் செப்டம்பர் மாதம் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 13 பிரபலங்கள் மற்றும் 3 சாமனியர்களுடன் இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சி களைகட்டப் போகிறது. நடிகர்கள் அத்யாயன் சுமன், விவியன் சேனா, நியா சர்மா உள்ளிட்டவர்கள் இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொள்வார்கள் என்ற தகவல்கள் கசிந்துள்ளன.

  புறக்கணிப்போம்

  புறக்கணிப்போம்

  பாலிவுட்டில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தொடர்பான சர்ச்சைகள் வெடித்து வரும் நிலையில், சல்மான் கானின் இந்த பிக்பாஸ் டீசர் நெட்டிசன்கள் இடையே பிரச்சனையை கிளப்பி இருக்கிறது. சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியை பார்க்க மாட்டோம்.. புறக்கணிப்போம் என சுஷாந்த் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

  தெலுங்கு பிக்பாஸ்

  தெலுங்கு பிக்பாஸ்

  சமீபத்தில் நடிகர் நாகார்ஜுனா தெலுங்கு பிக்பாஸை தொகுத்து வழங்க தான் தயாராகி விட்டதாக, ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். கோட் சூட்டில் சூப்பராக இருக்கும் அவருக்கு மேக்கப் போடும் நபர்கள், பக்காவான பாதுகாப்பு ஷூட்களை அணிந்தபடி நிற்கும் அந்த புகைப்படம் செம வைரல் ஆனது.

  தமிழில் எப்போது

  தமிழில் எப்போது

  கொரோனா பாதிப்பு காரணமாக இந்நேரம் தொடங்கப்பட்டிருக்க வேண்டிய பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னமும் உறுதி செய்யப்படாமல் இருக்கிறது. தமிழில் மீண்டும் உலக நாயகன் கமல்ஹாசனே 4வது சீசனை தொகுத்து வழங்குவாரா? என்பது கேள்விக் குறியாகி இருக்கிறது. மேலும், அவரது மகள் ஸ்ருதிஹாசன் தொகுத்து வழங்கவும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  English summary
  Biggboss season 14 teaser out now. Bollywood superstar Salman Khan again host the favorite show. In this teaser Salman Khan’s lockdown farming and tractor driving videos are used.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X