Don't Miss!
- Sports
சச்சினாலேயே முடியவில்லை, மற்றவர்களால் எப்படி முடியும்.. கோலி, ரோகித்துக்கு அஸ்வின் ஆதரவு
- News
டான்ஸ் கத்துக்க வந்த அந்த 4 பேர் எங்கே?.. சந்தேகம் கிளப்பும் டான்ஸர் ரமேஷ் உறவினர்கள்!
- Finance
மாதம் ரூ.5000 வருமானம் வேண்டுமா..அஞ்சலகத்தோடு MIS திட்டம் தான் சரியான சாய்ஸ்..!
- Technology
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- Automobiles
ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முதல் சர்வீசுக்கான செலவு எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல இவ்ளோ
- Lifestyle
வார ராசிபலன் 29 January to 04 February 2023 - இந்த வாரம் இந்த ராசிக்காரர்களுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும்!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
The pain of Aditha Karikalan: “இளம் வயதில் இருந்து அவள் என்னவள்”: ஐஸ்வர்யா ராய்க்காக உருகிய விக்ரம்
சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றுள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தில் சீயான் விக்ரம் ஆதித்த கரிகாலன் பாத்திரத்தில் நடித்துள்ளார். .
ஆதித்த கரிகாலன் கேரக்டரில் விக்ரமின் ஆக்ரோஷமான நடிப்பை பார்த்த ரசிகர்கள் அவரை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
பான் இந்தியா படமாக பொன்னியின் செல்வன் கவரவில்லை.. இந்தி வசூல் இவ்ளோ தான்.. ப்ளு சட்டை மாறன் ட்வீட்!

ஆதித்த கரிகாலன் விக்ரம்
மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸானது. அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை பின்னணியாகக் கொண்டு உருவான இந்தப் படம், வரலாற்றுப் பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஐஸ்வர்யா லெக்ஷ்மி என பெரிய ஸ்டார் காஸ்டிங்குடன் பொன்னியின் செல்வன் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் விக்ரம் ஆதித்த கரிகாலனாக நடித்து ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளார்.

நந்தினியால் உருகிய கரிகாலன்
ஆதித்த கரிகாலனாக நடித்துள்ள விக்ரமின் நடிப்புக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது. நந்தினி கேரக்டரில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராயை காதல் தோல்வியால் மணமுடிக்காமல் போகும் விக்ரம், அதனால் போர், மது, சண்டை என விரக்தியான மனநிலையில் படம் முழுக்க வந்துபோகிறார். காதல் தோல்வி ஒருவனை நிதானம் இழக்கச் செய்துவிடும் என்பதை விக்ரமின் ஆதித்த கரிகாலன் கேரக்டர் அப்படியே திரையில் பிரதிபலிக்கிறது. விக்ரமின் கேரியரில் மிக முக்கியமான படமாக பொன்னியின் செல்வனும், சிறப்பான கேரக்டராக ஆதித்த கரிகாலனும் நிலைத்து நிற்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஆதித்த கரிகாலனின் வலி
முன்னதாக ஏற்கனவே பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் ஆதித்த காரிகாலன் கேரக்டரில் நடித்தது குறித்து விக்ரம் எமோஷனலாக பேசியிருந்தார். ஆதித்த கரிகாலன் தனது கனவு பாத்திரம் எனவும், அந்த நெருப்பு இன்னும் என்னுள் எரிந்துகொண்டிருக்கிறது என்றும் நெகிழ்ச்சியாக கூறியிருந்தார். அதனை விக்ரமின் ஆதித்த கரிகாலன் பாத்திரத்தை திரையில் பார்த்த ரசிகர்கள் நிச்சயம் உணர்ந்திருப்பார்கள். ஐஸ்வர்யாவை நினைத்து உருகும் காட்சிகளில் விக்ரம் தாறுமாறாக ஸ்கோர் செய்துள்ளார்.

புதிய ப்ரோமோ ரிலீஸ்
இந்நிலையில், பொன்னியின் செல்வன் படக்குழு விக்ரமின் ஆதித்த கரிகாலன் பாத்திரம் பற்றி புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது. 'The pain of Aditha Karikalan' ஆதித்த கரிகாலனின் வலி என்ற பெயரில் வெளியான இந்த ப்ரோமோ வைரலாகி வருகிறது. அதில், "இளம் வயதில் இருந்து அவள் என்னவள்" என நந்தினியாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராய்க்காக விக்ரம் உருகும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் சிலர் மணிரத்னம் இயக்கிய ராவணன் படத்தில் வரும் விக்ரம், ஐஸ்வர்யா ராய் காட்சியுடன் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ராவணன் படத்திலும் விக்ரம் - ஐஸ்வர்யா ராய் கெமிஸ்ட்ரி மாஸ் காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.