ஜப்பானில் வசூல் சாதனை செய்த முதல் இந்திய திரைப்படம்… ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர்-க்கு கிடைத்த பெருமை

ஐதராபாத்: ராஜமெளலி இயக்கத்தில் வெளியான 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் ரசிகர்களின் வரவேற்புடன் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது.

ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட் உள்ளிட்ட பலர் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் நடித்திருந்தனர்.

இந்தப் படம் ஆஸ்கார் விருதுவிழாவில் போட்டியிடும் நிலையில், தற்போது ஜப்பானிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வசூலில் சாதனை படைத்துள்ளது. .

ஆயிரம் கோடியை கடந்த ஆர்.ஆர்.ஆர்

ஆயிரம் கோடியை கடந்த ஆர்.ஆர்.ஆர்

ராஜமெளலி இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியான 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தில், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான ஆர்ஆர்ஆர் பிரம்மாண்டமான வெற்றிப் பெற்றது. மேலும், பாக்ஸ் ஆபிஸிலும் 1200 கோடிக்கும் மேல் கலெக்‌ஷன் செய்தது. ஆர்.ஆர்.ஆர் படத்தின் மேக்கிங்கை ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் பாராட்டியதோடு, இந்தப் படம் கண்டிப்பாக ஆஸ்கர் விருது வெல்லும் என ஆருடம் கூறினர்.

ஜப்பானில் ஆர்ஆர்ஆர்

ஜப்பானில் ஆர்ஆர்ஆர்

திரையரங்குகளைத் தொடர்ந்து ஒன்றுக்கும் மேற்பட்ட ஓடிடி தளங்களிலும் வெளியானது ஆர்ஆர்ஆர். நெட்பிளிக்ஸ், டிஸ்னி ப்ளஸ், ஜீ5 தளங்களில் வெளியான 'ஆர்.ஆர்.ஆர்' படத்திற்கு, ஓடிடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், இந்தத் திரைப்படம் தற்போது ஜப்பான் நாட்டிலும் வெளியாகியுள்ளது. ஜப்பான் மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியான ஆர்ஆர்ஆர் படத்தின் ப்ரோமோஷனுக்காக ராஜமெளலி, ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் அந்நாட்டிற்கு சென்றிருந்தனர்.

முதல் நாள் வசூல்

முதல் நாள் வசூல்

இந்நிலையில், ஜப்பானில் அந்நாட்டு மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியான ஆர்.ஆர்.ஆர், முதல் நாளில் சூப்பரான வசூலை செய்து புதிய சாதனை படைத்துள்ளது. ஜப்பான் பாக்ஸ் ஆபிஸில் இருந்து தகவலின் படி, முதல் நாளில் மட்டும் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு முன்னர் ரஜினியின் முத்து, ராஜமெளலி இயக்கிய பாகுபலி, பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ ஆகிய படங்கள் தான் ஜப்பானில் அதிகம் வசூல் செய்த படங்களாக இருந்தன. இப்போது ஆர் ஆர் ஆர் படம், அனைத்து படங்களையும் பின்னுக்கு தள்ளிவிட்டு முதல் நாளிலேயே மாஸ் காட்டியுள்ளது. மேலும், இந்த வார இறுதிக்குள் 3 கோடிக்கும் அதிகமாக வசூலிக்கும் எனக் கூறப்படுகிறது.

ஜப்பான் ரசிகர்கள் கொண்டாட்டம்

ஜப்பான் ரசிகர்கள் கொண்டாட்டம்

ஆர்.ஆர்.ஆர் படத்தை கொண்டாடி வரும் ஜப்பான் ரசிகர்கள், மேக்கிங், சினிமோட்டோகிராபி, ஆக்சன் காட்சிகள் எல்லாம் சூப்பராக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் ஆர் ஆர் ஆர் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது. ஆஸ்கர் போட்டியில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் மொத்தம் 15 பிரிவுகளில் போட்டியிடவுள்ள நிலையில், ஜப்பானில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றுள்ளது, புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X