»   »  சூர்யா- காஜல் அகர்வாலின் "பச்சக்".. செம டுபாக்கூராமே தெரியுமா உங்களுக்கு?

சூர்யா- காஜல் அகர்வாலின் "பச்சக்".. செம டுபாக்கூராமே தெரியுமா உங்களுக்கு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதுல பாருங்க பாஸ்... கண்ணால் காண்பது பொய்.. காதால் கேட்பது பொய் என்பார்கள். அது சினிமாவுக்கு 200 சதவீதம் பொருந்தும். இப்போது நாம் திரையில் பார்க்கும் விஷயங்கள் எல்லாமே நிஜம் என்று கூறி விட முடியாது. அந்த அளவுக்கு டெக்னாலஜி வந்து விட்டது.

இப்படித்தான் மாற்றான் என்று ஒரு படம் வந்தது. நம்ம சூர்யாதான் ஹீரோ.. டபுள் ஹீரோ பாஸ்.. ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள். ஜோடியாக காஜல் அகர்வால். படத்தில் ஒரு செம சீன் வரும். எல்லோரும் தவறாமல் பார்த்திருப்பீங்க.அதாவது டபுள் சூர்யாவும், காஜல் அகர்வாலும் படம் பார்க்கப் போயிருப்பாங்க. அப்ப, காஜல் அகர்வாலும், அவரோட லவ்வர் சூர்யாவும் ஒரு செம கிஸ்ஸடிக்கும் சீன் வரும். தியேட்டரே ஆடிப் போயிரும் இந்த கிஸ்ஸைப் பார்த்து.. ஏன் காஜல் அகர்வால் கூட ஷாக் பீலிங் காட்டியிருப்பார்.. ஆனா, அப்புறம் சிரிச்சுக்குவார், அதுவா பாஸ் முக்கியம், அதை விடுங்க.


இப்போ மேட்டர் என்னன்னா.. இந்த கிஸ்ஸிங் சீனே செம டுப்பாக்கூர்.. அப்படிங்கிறதுதான். அதாவது நாம் கண்ணால் கண்ட லிப் டூ லிப் பச்சக் நடக்கவே இல்லையாம்.. மாறாக அது ஒரு செட்டப் என்று இப்போது தெரிய வந்துள்ளது. அப்படித்தான் இந்த வீடியோ காட்சியும் நமக்கு சொல்லுது.


நிஜத்தில் நடந்தது என்னன்னா, காஜல் அகர்வாலையும், சூர்யாவையும் தனித் தனியாக உட்கார வைச்சு இந்த சீனை எடுத்திருக்காங்க. காஜல் முத்தமிட்டது சூர்யாவின் உதடுகளே இல்லையாம். மாறாக அது ஒரு குஷன் தலையணையாம். அதேபோல சூர்யா முத்தமிட்டது காஜலை இல்லையாம், அவருக்குக் கொடுக்கப்பட்டது பிளாஸ்டிக் ஷீட்டாம்.. நம்ப முடியலைல்ல.. ஆனா நம்பித்தான் ஆகனும் பாஸ்.


இப்படி இருவரையும் தனித் தனியே தாறுமாறாக கிஸ்ஸடிக்க வைத்து விட்டு இரண்டையும் சேர்த்து உதட்டோடு உதடு பொருத்தி கொடுத்தது போல காட்டி விட்டு பார்த்தவர்களை உசுப்பேற்றி விட்டு விட்டார் நம்ம கில்லாடி இயக்குநர் கே.வி.ஆனந்த்.


இப்ப சொல்லுங்க.. கண்ணால் காண்பதும் பொய்.. காதால் (பச்சக் சத்தம்) கேட்பதும் பொய்தானே பாஸ்!


ஓகே. வாங்க அந்த வீடியோக் காட்சியைக் காணலாம்...!

English summary
The kissing of Surya and Kajal Agarwal in the film Maatran is not real, reveals this video shot.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil