»   »  பிக்பாஸ் ஆரவ்வை அதிர்ச்சியாக்கிய அந்தப் பாடல்!

பிக்பாஸ் ஆரவ்வை அதிர்ச்சியாக்கிய அந்தப் பாடல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது துணிச்சலான பேச்சின் மூலம் தமிழ்நாட்டு ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை ஓவியா.

நிகழ்ச்சியில் இவர் செய்த சின்னச் சின்ன விஷயங்கள் கூறிய வார்த்தைகள், பாடிய பாடல்கள் என அனைத்தும் சமூக வலைதளங்களிலும் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலம்.

அதிலும் 'நீங்க ஷட்டப் பண்ணுங்க' என்று ஓவியா கஞ்சா கருப்புவை பார்த்துக் கூறிய அந்த வார்த்தை யுவன் இசையில் அனிருத் குரலில் ஒரு பாடலாகவே உருவாகிவிட்டது.

பலூன் ப்ரொமோஷன் :

'பலூன்' படத்தின் புரொமோஷனுக்காக நடிகை அஞ்சலி பிக்பாஸ் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு யுவன் இசையில் அனிருத் பாடிய 'நீங்க ஷட்டப் பண்ணுங்க' என்ற பாடலை ஒலிபரப்பாகிறது.

விளக்கிய அஞ்சலி :

விளக்கிய அஞ்சலி :

'நீங்க ஷட்டப் பண்ணுங்க...' பாடலுக்கு பிக்பாஸ் போட்டியாளர்களோடு அஞ்சலியும் ஆடினார். அப்போது அஞ்சலி ஆரவ்வை பார்த்து 'ஷட்டப் பண்ணுங்க டெடிகேட்டிங் டு யூ' எனக் கூறுகிறார். ஓவியா சொன்ன வரியை வைத்து இந்தப் பாடல் உருவானது என்ற விவரத்தை அஞ்சலி, ஆரவ்விடம் கூறுகிறார்.

அதிர்ச்சியான ஆரவ் :

அதிர்ச்சியான ஆரவ் :

அஞ்சலி சொன்னதைக் கேட்டதும் அதிர்ந்துபோன ஆரவ் அப்படியா என விசாரிக்கிறார். ஓவியா வெளியேறிய பின் பிக்பாஸ் வீட்டுக்குல் நுழைந்த பிந்துமாதவி, ஹரீஷ் ஆகியோரிடமும் இது பற்றி விசாரிக்கிறார்.

ஆச்சரியத்தில் போட்டியாளர்கள் :

ஆச்சரியத்தில் போட்டியாளர்கள் :

கணேஷ் வெங்கட்ராம் ஷட்டப் பண்ணுங்க பாடலைப் பற்றி 'இது பெரிய விஷயம்ல பிந்து...' என பிந்து மாதவியிடம் ஆச்சரியமாகக் கேட்கிறார். ஓவியாவுக்குக் கிடைத்திருக்கும் மக்கள் ஆதரவை அனைவரும் இப்போது புரிந்துகொண்டுள்ளனர்.

English summary
Actress Anjali has gone to Biggboss house for 'balloon' film promotion. Contestants were surprised when the song 'Shut-up Pannunga' was broadcast on biggboss house.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil