”அந்த ஆறு பேருமே ஒருத்தான் தான்”: அல்டிமேட்டாக வெளியானது கார்த்தியின் சர்தார் டீசர்

சென்னை: கார்த்தி நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை (செப் 30) வெளியாகிறது.

பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தி வந்தியத்தேவன் கேரக்டரில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இப்போது கார்த்தியின் சர்தார் பட டீசரை படக்குழு வெளியிட்டு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.

வந்தியத்தேவன் கார்த்தி

வந்தியத்தேவன் கார்த்தி

கார்த்தியின் நடிப்பில் கடைசியாக வெளியான 'விருமன்' திரைப்படம் கமர்சியலாக ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந்து நாளை 'பொன்னியின் செல்வன்' படமும் வெளியாகிறது. விருமனில் கிராமத்து கெட்டப்பில் கலக்கிய கார்த்தி, பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவனாக வாள் சுழற்ற ரெடியாகிவிட்டார். ரஜினி, கமல் என பல முன்னணி ஹீரோக்கள் நடிக்க ஆசைப்பட்ட வந்தியத்தேவன் கேரக்டரில் கார்த்தி நடித்துள்ளது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சர்தார் டீசர் ரிலீஸ்

சர்தார் டீசர் ரிலீஸ்

பொன்னியின் செல்வன் படத்தைத் தொடர்ந்து கார்த்தியின் சர்தார் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகிறது. பிஎஸ் மித்ரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கார்த்தியுடன் ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். பொன்னியின் செல்வன் நாளை வெளியாகவுள்ள நிலையில், தற்போது கார்த்தியின் சர்தார் பட டீசரும் வெளியாகி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ட்ரீட் கொடுத்துள்ளது.

ரகசிய உளவாளியாக கார்த்தி

ரகசிய உளவாளியாக கார்த்தி

ஒரு நிமிடம் 40 நொடிகள் வரை ஓடும் இந்த டீசர் முழுக்க முழுக்க ஆக்சனில் அதிரடி காட்டியுள்ளது. கார்த்தி ரகசிய உளவாளியாக நடித்துள்ளதும் உறுதியாகியுள்ளது. பல தோற்றங்களில் ரகசிய ஏஜெண்டாக நடித்துள்ள கார்த்தியின் இன்ட்ரோ சீன், செம்ம மாஸாக உருவாகியுள்ளது. டீசரைப் போலவே சர்தார் திரைப்படமும் வேறலெவலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது வெளியான சர்தார் டீசரை, கார்த்தி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தீபாவளிக்கு சர்தார் ட்ரீட்

தீபாவளிக்கு சர்தார் ட்ரீட்

தீபாவளி தினங்களில் டாப் ஹீரோக்களின் படங்கள் வெளியாவது வழக்கம். ஆனால் இந்த வருட தீபாவளிக்கு கார்த்தியின் சர்தார், சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படங்கள் மட்டும் வெளியாகும் என எதிர்பார்க்கபப்டுகிறது. கார்த்தியின் சர்தார் டீசருடன் ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் செய்துவிட்ட நிலையில் விரைவில் பிரின்ஸ் படத்தின் டீசரையும் சிவகார்த்தியேன வெளியிடுவார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், சர்தார் படத்தின் ப்ரோமோஷனை முடித்துவிட்டு ராஜூ முருகன் இயக்கத்தில் ஜப்பான் படத்தின் ஷூட்டிங்கில் கார்த்தி பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பான் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X