சமந்தாவின் பிடிவாதத்தால் தள்ளிப்போகும் சாகுந்தலம் ரிலீஸ்…? செம்ம கடுப்பில் இருக்கும் படக்குழு!
சென்னை: சமந்தா நடிப்பில் யசோதா, சாகுந்தலம், குஷி ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன.
சாகுந்தலம் திரைப்படம் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்ட நிலையில் அதன் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சாகுந்தலம் படத்தின் ரிலீஸ் தாமதமாவதற்கு நடிகை சமந்தா தான் காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.

சமந்தாவின் சாகுந்தலம்
தமிழ், தெலுங்கு, பாலிவுட் என இப்போது மொழிகளைக் கடந்து பான் இந்தியா நடிகையாக ரவுண்டு அடித்து வருகிறார் சமந்தா, நாக சைதன்யாவுடன் காதல், திருமணம், பிரிவு என பல சர்ச்சைகளையும் சோதனைகளையும் கடந்து, பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தமிழில் கடைசியாக விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் கதிஜாவாக நடித்திருந்தார் சமந்தா. இதனைத் தொடர்ந்து சாகுந்தலம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

ரிலீஸ் தேதியில் மாற்றம்
காளிதாசன் எழுதிய சாகுந்தலத்தை தழுவி உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் சகுந்தலையாக சமந்தாவும், துஷ்யந்தனாக மலையாள நடிகர் தேவ் மோகனும் நடித்துள்ளனர். குணசேகர் இயக்கியுள்ள இந்தப் படம், நவம்பர் 4ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், திடீரென அந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுவதாக படக்குழு அறிவித்தது. சாகுந்தலம் படத்தை 3டியில் மாற்ற உள்ளதால் தான் ரிலீஸ் தேதியில் மாற்றம் எனவும் தகவல் வெளியானது. இதனிடையே அமெரிக்கா சென்றிருந்த சமந்தா தற்போது மும்பை திரும்பிவிட்டதாக சொல்லப்படுகிறது.

சமந்தா தான் காரணமா?
அரிதான தோல் நோயால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சமந்தா, அமெரிக்காவில் அதற்காக சிகிச்சை மேற்கொண்டதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், அவரது மேனேஜர் அது உண்மையில்லை என மறுப்புத் தெரிவித்து இருந்தார். இந்நிலையில். தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகியுள்ள யசோதா படத்தின் படப்பிடிப்பு முடிந்து சில மாதங்கள் ஆன நிலையிலும் இன்னும் திரைக்கு வரவில்லை. இந்த தாமதத்துக்கு சமந்தா தான் காரணம் என்று படக்குழுவினர் குற்றம்சாட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் டப்பிங்கை தொடங்கியதும் சமந்தா அமெரிக்கா சென்று இரண்டு மாதங்கள் தங்கிவிட்டார்.

டப்பிங் பேச விருப்பம்?
சாகுந்தலம் படத்தில் சமந்தாவுக்கு பின்னணி பாடகி சின்மயி டப்பிங் குரல் கொடுத்து இருந்தார். ஆனால் 'நடிகையர் திலகம்' படத்தின் தெலுங்கு வெர்ஷனான மகாநதியில் சமந்தாவே சொந்தக் குரலில் டப்பிங் கொடுத்திருந்தார். அதேபோல், இப்போது யசோதா படத்திலும் சொந்தக் குரலில் பேச சமந்தா விரும்புகிறாராம். ஆனால் படக்குழுவினர் டப்பிங் கலைஞரை வைத்து குரல் கொடுக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். சமந்தா அதற்கு சம்மதிக்காமல் நானே குரல் கொடுப்பேன் என்று பிடிவாதம் செய்வதாகக் கூறப்படுகிறது. சமந்தாவின் குரல் படத்துக்கு மைனசாக இருக்கும் என்று படக்குழுவினர் தயங்குகின்றனர். சமந்தாவுக்கும் படக்குழுவினருக்கும் ஏற்பட்டுள்ள இந்த மோதலால் சாகுந்தலம் ரிலீஸாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











