சீயான் 61 டைட்டில் இதுதானா…? அபிஸியல் அப்டேட் வரும் முன்பே பரபரக்கும் கோலிவுட்!
சென்னை: விக்ரம் - பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகும் சீயான் 61 படத்தின் டைட்டில் இன்று அறிவிக்கப்படவுள்ளது.
ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கிவிட்டது.
இந்நிலையில், சீயான் 61 படத்தின் டைட்டில் குறித்து தகவல் வெளியாகி அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

சீயான் 61
விக்ரம் நடிப்பில் மஹான், கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. மஹான் அமேசான் ஓடிடியிலும், கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்கள் திரையரங்குகளிலும் ரிலீஸானது. இதில், மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் நடித்திருந்த பொன்னியின் செல்வன் படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. மேலும், வசூலிலும் இதுவரை 500 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல், ஆதித்ய கரிகாலன் கேரக்டரில் விக்ரமின் நடிப்பும் பலரின் பாராட்டுகளைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து 'சீயான் 61' படத்தில் நடிக்கவுள்ளார் விக்ரம்.

புதிய கூட்டணியில் விக்ரம்
பா ரஞ்சித் இயக்கும் சீயான் 61 படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. முதன்முறையாக பா ரஞ்சித்துடன் விக்ரம் இணைந்துள்ளதால் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதேபோல், இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் கமிட் ஆகியுள்ளார். விக்ரம் - பா ரஞ்சித் - ஜிவி பிரகாஷ் என முற்றிலும் புதியக் கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்துக்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில், இன்று இரவு 8 மணிக்கு சீயான் 61 டைட்டில் வெளியாகும் என பா ரஞ்சித் அறிவித்துள்ளார்.

டைட்டில் இதுதானா?
சீயான் 61 கன்னடத்தில் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த கேஜிஎப்ஃ பாணியில் உருவாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. கோலார் சுரங்கத்தின் கதைக்களத்தில் ஆக்சன் திரைப்படமாக இருக்கும் எனவும், அதற்கேற்றபடி விக்ரமின் கெட்டப் ரொம்பவே ஸ்பெஷலாக கிரியேட் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே புதிய கெட்டப்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டும் விக்ரம், இந்தப் படத்தில் இன்னும் தரமாக சம்பவம் செய்வார் என அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதனிடையே, சீயான் 61 டைட்டில் 'கோலர் நகர்' என்று தகவல் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள் வெயிட்டிங்
சீயான் 61 படத்தில் விக்ரமுடன் நடிக்கும் மற்ற நடிகைகள் பற்றிய அப்டேட் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இன்று வெளியாகும் டைட்டில் போஸ்டருடன், இந்த தகவல்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், "சீயான் 61 அப்டேட் விரைவில் வெளியாகிறது. இது ஒரு கில்லர் ரைடாக இருக்கும், இசையை பொறுத்தவரை மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்" என ட்வீட் செய்துள்ளார். இதனால், இன்று இரவு 8 மணிக்கு வெளியாகவுள்ள டைட்டில் போஸ்டரை பார்க்க ரசிகர்கள் மரண வெயிட்டிங்கில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











