twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ராஜேஷ் கன்னா - ஆர் டி பர்மன் - கிஷோர் குமார்... திரையிசையில் அது ஒரு பொற்காலம்!

    By Shankar
    |

    Rajesh Khanna
    ராஜேஷ் கன்னா - ஆர் டி பர்மன் - கிஷோர் குமார்... எழுபதுகளின் தொடக்கத்திலிருந்து தொடர்ந்து பத்தாண்டுகள் பாலிவுட்டில் கொடிகட்டிப் பறந்த கூட்டணி இது.

    ஆராதனாவில் ஆரம்பித்தது இந்தக் கூட்டணி. அந்தப் படத்துக்கு இசை எஸ்டி பர்மன். ஆர்டி பர்மனின் தந்தை. இணையற்ற இசை மேதை. 'நாளெல்லாம் சாஷ்டாங்கமாக காலில் விழுந்து கும்பிட வேண்டும்' என்று இளையராஜா போற்றி வணங்கும் அளவுக்கு மாபெரும் இசைமேதை!

    அன்றைக்கு புகழின் உச்சியில் இருந்தவர் முகமத் ரஃபி. ஆனால் அவரை ஒரு பாடலுக்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டு, மற்ற பாடல்களை கிஷோர் குமாருக்குக் கொடுத்தார், தந்தையின் இசைக்கு நடத்துநராகப் பணியாற்றிய ஆர்டி பர்மன்.

    அவரது யோசனை பிரமாதமாக ஒர்க் அவுட் ஆனது. அன்று தொடங்கியது இந்த மும்மூர்த்திகளின் ராஜ்ஜியம்!

    33 படங்களில் இந்த மூவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர். இவற்றில் பெரும்பாலானவை சில்வர் ஜூப்ளி கூட அல்ல... கோல்டன் ஜூப்ளி படங்கள்.

    கதி பதங்கில் வரும் 'ப்யார் தீவானா ஹோதா...', 'யே ஷாம் மஸ்தானி...' இன்றும் இளசுகளைக் கிறங்கடிக்கும் இனிமையானவை.

    நமக் ஹரம் படத்தில் இடம்பெறும் 'நதியா கே தரியா' ராஜேஷ் கன்னா - கிஷோர் - ஆர்டியின் எவர்கிரீன் ஹிட். அந்தப் பாடலுக்கு குல்சாரின் வரிகளும், ஆர்டியின் துள்ளல் இசையும் கிஷோர் பாடும் விதமும் எப்போது கேட்டாலும் மனசை அள்ளிக் கொள்ளும்!

    அந்த ரூப்பு தேரா மஸ்தானா பட பாடல்களை பாலிவுட் உள்ளவரை மறக்க முடியுமா...!

    அமர் பிரேமில் இடம்பெற்றுள்ள சிங்காரி கோயி பட்கே..., அஜ்நபியில் கிறங்கடித்த பீகி பீகி ராத் மெய்ன்..., ஹம் தோனோ தோ ப்ரேமி.., ஏக் அஜ்நபி ஹஸீனா ஸே.., குத்ரத்தில் ஹமே தும்ஸே ப்யார் கித்னா... எத்தனையெத்தனை இனிமையான பாடல்கள்.

    அப்னா தேஷில் இந்த மூவரும் துள்ளல் இசையில் புதிய சரித்திரமே படைத்திருப்பார்கள். தி ட்ரெயின் மற்றும் அப்னா தேஷில் ராஜேஷ் கன்னாவுக்காக குரல் கொடுத்திருப்பார் ஆர் பர்மன். அதில் துனியா மேய்ன் லோகோ... காலத்தை வென்ற பாடல்!

    சினிமாவைத் தாண்டி, தனிப்பட்ட முறையிலும் இந்த மூன்று சிகரங்களும் ஒருவருக்கொருவர் அத்தனை அந்நியோன்னிய நட்பு பாராட்டினர்.

    இசையில் கொடிகட்டிப் பறந்த ஆர்டி பர்மனை, எண்பதுகளின் பிற்பகுதியில் பல முக்கிய தயாரிப்பாளர்களும் கைவிட்ட நேரத்திலும், ராஜேஷ் கன்னா மட்டும் தொடர்ந்து அவருடன் பணியாற்றினார். தன் சொந்தத் தயாரிப்புகளுக்கு அவரையே இசையமைப்பாளராக்கினார்.

    அதேபோல, ராஜேஷ் கன்னா முதல் முறையாக படம் தயாரித்தபோது, பாடகர்களில் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்த கிஷோர் குமார், பணம் வாங்காமல் அனைத்துப் பாடல்களையும் பாடிக் கொடுத்தார். அந்தப் படத்துக்கு தனக்கும் பணம் வேண்டாம் என்று கூறிவிட்டார் ஆர்டி பர்மன்.

    கிஷோர் குமார் மறைந்த பிறகு, அவரது குடும்பத்தினருக்கு தொடர்ந்து உதவியவர் ராஜேஷ் கன்னா. கிஷோரின் மகன் அமித் குமார் தயாரிப்பில், கிஷோர் குமார் இயக்கி பாதியில் நின்ற ஒரு படத்தை தன் சொந்த செலவில் முடித்துக் கொடுத்தாராம்.

    இந்த மூவரில் முதலில் மறைந்தவர் கிஷோர் குமார் (1987). அடுத்து ஆர் டி பர்மன் (1994). இப்போது ராஜேஷ் கன்னா.

    இசையால் மனங்களை என்றும் ஆளும் மும்மூர்த்திகள்!

    English summary
    Rajesh Khanna, R.D. Burman and Kishore Kumar are considered as the Tridevs of Bollywood. The trio were friends and have worked together in thirty three films. Work of Pancham with Khanna is regarded as legendary and far superior than any other actor-music director combinations. The king of playback singing Kishore Kumar had even credited Rajesh Khanna for his resurgence, so much so that he sang for Alag Alag, the first film produced by Rajesh Khanna without charging anything.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X