twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திறமையான நடிகர்..தெலுங்கு சினிமாவின் ரத்தினம்..ஜூனியர் என்.டி.ஆரை புகழ்ந்த அமித்ஷா!

    |

    ஹைதராபாத்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நடிகர் ஜூனியர் என்டிஆரை நேற்று ஹைதராபாத்தில் சந்தித்து பேசினார்.

    Recommended Video

    Sivakarthikeyan-அ முதல் முறையா!! Jr.NTR Speech in RRR grand Pre-Release event | Filmibeat Tamil

    தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநரான எஸ்.எஸ் ராஜமௌலி பாகுபலி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ஆர்.ஆர்.ஆர் படத்தை மிக பிரம்மாண்டமாக உருவாக்கி இருந்தார்.

    தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜூ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இத்திரைப்படம் ரத்தம் ரணம் ரௌத்திரம் என பெயரில் வெளியானது. பான் இந்திய திரைப்படமாக வெளியானத் இத்திரைப்படம் வசூலை வாரிக்குவித்தது.

    அமித் ஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய இளம் வாரிசு நடிகை.. அதுக்காகதானே? கதறவிடும் நெட்டிசன்ஸ்! அமித் ஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய இளம் வாரிசு நடிகை.. அதுக்காகதானே? கதறவிடும் நெட்டிசன்ஸ்!

    அமித்ஷா

    அமித்ஷா

    இந்நிலையில், தெலங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள முனுகோட் சட்டமன்ற தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜகோபால் ரெட்டி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்ததால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வர உள்ளது. இதற்கான பிரச்சாரத்திற்காக அமித்ஷா நேற்று ஹைதராபாத் வந்திருந்தார்.

    அமித் ஷா-ஜூனியர் என்டிஆர் சந்திப்பு

    அமித் ஷா-ஜூனியர் என்டிஆர் சந்திப்பு

    அங்கு பிரச்சாரம் முடிந்த பின்னர் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரை சுமார் 30 நிமிடங்கள் சந்தித்து பேசி உள்ளார். இந்த சந்திப்பு நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றுள்ளது. அமித் ஷா-ஜூனியர் என்டிஆர் சந்திப்பு சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. ஹைதராபாத் நகரில் திறமையான நடிகரும், நமது தெலுங்கு சினிமாவின் ரத்தினமுமான ஜூனியர் என்டிஆருடனான நல்லதொரு சந்திப்பு அமைந்தது என அமித் ஷா தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

    பா.ஜ.க திட்டம்

    பா.ஜ.க திட்டம்

    இவர்கள் இருவரின் சந்திப்புக்கு பின்னணியில் மிகப்பெரிய அரசியல் இருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது. தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் பாஜகவை தற்போது கடுமையாக தாக்கி பேசி வருகிறார். பிரதமரை விமர்சனம் செய்து வரும் அவருக்கு சரியான பாடம் கற்பிக்கக பாஜக விரும்புவதாக கூறப்படுகிறது.

    பின்னணி என்ன?

    பின்னணி என்ன?

    ஜூனியர் என்.டி.ஆர் ஆந்திராவின் முன்னாள் முதல்வர் என்.டி.ஆரின் பேரன் என்பதாலும், அவருக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் இருப்பதாலும், அவரை பாஜக பக்கம் இழுக்கவே இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இருவரின் சந்திப்பு புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    English summary
    Union Home Minister Amit Shah met actorJunior NTR in Novotel hotel in Hyderabad
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X