Don't Miss!
- Sports
அடபாவிங்களா.. ஐசிசியிடமே வேலையை காட்டிய மோசடி கும்பல்.. 15 கோடி ரூபாயை ஏமாந்தது அம்பலம்
- News
மக்களை தேடி மருத்துவம் திட்டத்துக்கு செலவிட்ட தொகை! ஒளிவு மறைவின்றி அமைச்சர் மா.சு. பதிலடி!
- Lifestyle
கும்பம் செல்லும் சுக்கிரனால் ஜனவரி 22 முதல் இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Finance
முகேஷ் அம்பானி காட்டில் பண மழை.. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் Q3ல் ரூ.15,792 கோடி லாபம்..!
- Automobiles
டெலிவரி தொடங்கியாச்சு.. இனி ஃபார்ச்சூனருக்கு பதிலா இந்த காருலதான் எல்லா அரசியல்வாதிகளும் வலம் வர போறாங்க!
- Technology
பந்துக்கு பந்து சிக்ஸ் அடிக்கும் Vivo: 5ஜி போன் இல்லாத எல்லாரும் கொடுத்து வச்சவங்க!
- Travel
சென்னையிலிருந்து திருப்பதி – தரிசன டிக்கெட் முன்பதிவு, பயணச் செலவுகள், தங்குமிடம் புக்கிங் – இதர தகவல்கள்!
- Education
TNPSC Road inspector Recruitment 2023:சிவில் டிராட்மென்ஷிப் சான்றிதழ் இருந்தால் 716 பேருக்கு வாய்ப்பு..!
பிக் பாஸ் வீட்டில் எப்ப பாரு நீதி, நேர்மை, நியாயம்… விக்ரமனை தலைதெறிக்க ஓடவிட்ட ஆயிஷா!
சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த வாரம் கொடுக்கப்பட்ட ஏலியன்ஸ் - பழங்குடியின மக்கள் டாஸ்க் முடிவுக்கு வந்தது.
இரண்டு அணிகளாக அணிகளாக இந்தப் போட்டி நடந்து முடிந்தாலும், போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் பூட்டுப் போடும் டாஸ்க்கும் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் எப்போதுமே நீதி, நேர்மை, நியாயம் என பேசிக்கொண்டிருக்கும் விக்ரமனை, ஆயிஷா ஓடவிட்ட சம்பவம் வைரலாகி வருகிறது.
அட்டக் கத்தி அசீம், காமெடி பீஸ் மைனா நந்தினி… Simply Wasted என பங்கமாக கலாய்த்த பிக் பாஸ்!

பிக் பாஸ் வீட்டின் நாட்டாமை
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இதுவரை 7 பேட்டியாளர்கள் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டனர். அதனைத் தொடர்ந்து இந்த வாரம் ஏலியன்ஸ் - பழங்குடிகள் என்ற அவதார் கான்செப்ட் நடந்து முடிந்தது. இதனிடையே, பிக் பாஸ் சீசன் 6 தொடங்கிய நாள் முதல், வீட்டில் நடக்கும் பிரச்சினைகளில் வாண்ட்டடாக சென்று தலையிட்டு வருகிறார் விக்ரமன். அதாவது தவறு செய்பவர்களுக்கு எதிராகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும் களமிறங்குவதே விக்ரமனின் ஃபுல் டைம் வேலையாக இருக்கிறது.

ஆயிஷாவுக்கு ஆதரவாக நியாயம் பேசிய விக்ரமன்
முதல் வாரம் நடந்த டாஸ்க்கில் ஆயிஷாவை அசீம் டார்க்கெட் செய்து விளையாடினார். அப்போது முதல் ஆளாக குரல் கொடுத்தது விக்ரமன் தான். அன்று முதல் இப்போது வரை எல்லா பஞ்சாயத்துகளிலும் விக்ரமன் கரெக்டாக வந்து ஆஜராகிவிடுவார். வார இறுதியில் கமல்ஹாசன் கூட பிக் பாஸ் வீட்டில் நடந்த சில சம்பவங்கள் குறித்து விக்ரமனிடம் கருத்து கேட்பது வழக்கம். ஒவ்வொரு விசயத்துக்கும் விக்ரமன் நியாயத்துக்காக போராடி வருவதை, ஹவுஸ்மேட்ஸே சில நேரம் கிண்டல் செய்வதுண்டு.

விக்ரமனை ஓடவிட்ட ஆயிஷா
அதேநேரம் ஃபேக்டரி டாஸ்க்கில் முதலில் தனலட்சுமி தான் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கமல் குறும்படம் போட்டுக் காட்டி விக்ரமனை வெற்றியாளராக அறிவித்தார். மேலும், இந்த வாரமும் ஜனனிக்கு ஆதரவாக அசீமுடன் சண்டையிட்ட விக்ரமன், அதன்பின், அசீம் அமுதவாணனை அடிக்கச் சென்றதற்கும் கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில், இந்த வாரத்தில் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் இரண்டு பூட்டுகள் கொடுக்கப்பட்டு, அதை சக போட்டியாளர்களுக்கு மாட்டிவிட வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது. மேலும், ஒருவரை ரிலீஸ் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டது.

தெறித்து ஓடிய விக்ரமன்
இதில் ஆயிஷாவுக்கு கிடைத்த பூட்டில் ஒன்றை எடுத்துக்கொண்டு விக்ரமனிடம் சென்றார். ஏற்கனவே விக்ரமன் இரண்டு பூட்டு வாங்கிவிட்டதால், ஆயிஷாவுக்கு பயந்து ஓடினார். பிக் பாஸ் வீடு முழுவதும் தலைதெறிக்க ஓடிய விக்ரமனை விரட்டிப் பிடித்த ஆயிஷா, எப்ப பாரு வீட்டுல நீதி, நேர்மை, நியாயம்ன்னு பேசிட்டு சோம்பேறியா இருக்கக் கூடாது. இப்படிதான் ஓடணும் என விரட்டினார். மேலும், எனது பூட்டை ரிலீஸ் செய்வேன் எனக் கூறிவிட்டு துரோகம் செய்ததற்காக இந்த பூட்டு என விக்ரமனை சுற்றி வளைத்தார். ஆயிஷாவுக்கு ஆதரவாக மணிகண்டனும் தனலட்சுமியும் களமிறங்க, இறுதியில் விக்ரமனும் அவர்களிடம் சரணடைந்தது வேடிக்கையாக இருந்தது. இந்த வீடியோவை நெட்டிசன்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.