என்னது ரஜினி விஜய்க்கு அடுத்து சிவகார்த்திகேயனா?.. அப்ப அஜித்?.. கூல் சுரேஷ்க்கு தில்லுதான்!
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள பிரின்ஸ் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
பிரின்ஸ் படத்தை ரசிகர்களுடன் திரையரங்கில் பார்த்த கூல் சுரேஷ், சிவகார்த்திகேயன் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் பற்றி கூல் சுரேஷ் பேசிய இந்த வீடியோ இணையத்தில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.

அதிருப்தியில் ரசிகர்கள்
சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம், தீபாவளியை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியானது. அனுதீப் இயக்கியுள்ள இந்தப் படம், தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியாகியுள்ளது. சிவாவுடன் சத்யராஜ், மரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம், ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றே தெரிகிறது. பலரும் இது சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' படத்தின் செகண்ட் பார்ட் போல இருப்பதாகக் கூறியுள்ளனர். இன்னும் சிலரோ கலக்கப்போவது யாரு ரியாலிட்டி ஷோ மாதிரி இருக்கு என விமர்சனம் செய்துள்ளனர். டாக்டர், டான் என அடுத்தடுத்து ஹிட் கொடுத்த சிவகார்த்திகேயனுக்கு, பிரின்ஸ் திருஷ்டிப் பொட்டாக மாறிவிட்டது.

கூல் சுரேஷ் என்ட்ரி
இந்நிலையில், சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படத்தை, நடிகர் கூல் சுரேஷ் திரையரங்கில் சென்று பார்த்துள்ளார். அதன்பின்னர் வழக்கம் போல வெளியே வந்து பிரின்ஸ் படம் குறித்தும் சிவகார்த்திகேயன் பற்றியும் தாறுமாறாக புகழ்ந்து பேசினார். அப்போது திடீரென எமோஷனல் ஆன கூல் சுரேஷ், சினிமா பைனான்சியரும் தயாரிப்பாளருமான அன்புச் செழியன் சிவகார்த்திகேயன் பற்றி பேசியதை குறிப்பிட்டார். அதாவது ரஜினி, விஜய்க்கு பிறகு சிவகார்த்திகேயன் தான் மாஸ் என பிரின்ஸ் ஆடியோ வெளியிட்டு விழாவில் அன்புச் செழியன் பேசியிருந்தார்.

மச்சான் நீதான் மாஸ்
அதனை குறிப்பிட்ட கூல் சுரேஷ், "மிஸ்டர் அன்புச் செழியன் சார்... எப்படி சார் அப்படி சொன்னீங்க" என கதறியதோடு, "நீங்க சொன்னது உண்மை தான் சார், என் மச்சான் சிவகார்த்திகேயன் தான் மாஸ்... ரஜினி, விஜய்க்கு அடுத்து சிவகார்த்திகேயன் தான் மாஸ்.... என் மச்சான் சிவகார்த்திகேயன் செம்ம மாஸா இருக்கார்.... அன்புச் செழியன் சார் நீங்க சொன்ன வாக்கு பலித்து விட்டது" என உற்சாகத்தில் கூக்குரலிட்டார். இதனைக் கேட்ட சிவகார்த்திகேயன் ரசிகர்களும் கூல் சுரேஷை இன்னும் உசுப்பேத்திவிட்டனர்.

அஜித் ரசிகர்கள் வெயிட்டிங்
தமிழ் சினிமாவில் எப்போதுமே இருதுருவங்களில் இரண்டு ஹீரோக்கள் முன்னணியில் இருப்பது வழக்கம். எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல் என தொடரும் இந்த யுத்தம், இப்போது விஜய் - அஜித், அடுத்து சிம்பு - தனுஷ் என வரிசை கட்டி நிற்கிறது. இந்நிலையில், ரஜினி, விஜய்க்கு அடுத்து சிவகார்த்திகேயன் தான் மாஸ் என கூல் சுரேஷ் பேசியது, அஜித், சிம்பு, தனுஷ் ரசிகர்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. சென்ற மாதம் சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' படத்துக்கு ப்ரோமோஷன் செய்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷிடம் இருந்து ஐபோனை தட்டித் தூக்கினார். இந்த மாதம் சிவகார்த்திகேயனையும் அன்புச் செழியனையும் கூல் சுரேஷ் டார்க்கெட் செய்துவிட்டார் போல.


Click it and Unblock the Notifications











