»   »  அபிராமி ராமநாதன் - திருப்பூர் சுப்ரமணி பதவிப் போட்டியால் ரத்தான தியேட்டர் உரிமையாளர் கூட்டம்!

அபிராமி ராமநாதன் - திருப்பூர் சுப்ரமணி பதவிப் போட்டியால் ரத்தான தியேட்டர் உரிமையாளர் கூட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ்நாடு முழுவதும் உள்ள தியேட்டர்களில் படங்களை ஒரே மாதிரியாக விகிதாசார அடிப்படையில் திரையிட முடிவெடுக்க வரும் ஏப்ர்ல 20-ம் தேதி அன்று திருச்சியில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது.

மாநிலத் தலைவர் பதவிக்கான போட்டி காரணமாக இந்த கூட்டம் தற்போது ரத்து செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது. ஆர் எம் அண்ணாமலை, அபிராமி ராமநாதன், திருப்பூர் சுப்பிரமணி ஆகியோர் ஆளுக்கொரு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கங்களை நடத்தி வருகின்றனர். திரையுலக பிரச்சினைகளை பொது வெளியில் உரக்கப் பேசி வருபவர் திருப்பூர் சுப்ரமணி மட்டுமே. இவரது பேச்சுக்கு மட்டுமே திரையுலகில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர் கூட்டமைப்பில் தீர்மானிக்கும் சக்தியாக சுப்பிரமணி உள்ளார். கோவை திரைப்பட விநியோக பகுதியில் தியேட்டர்களை தனது பைனான்ஸ் பலத்தால் சுப்பிரமணி கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கிறார்.

Theater Owners Assn Meeting cancelled

சென்னை நகருக்குள் மட்டுமே அபிராமி ராமநாதனுக்கு பலம். ஆனால் இவர் சொல்வதை இங்கு யாரும் கேட்பதில்லை. செங்கல்பட்டு, சேலம் விநியோக பகுதிகளில் ஆர்எம் அண்ணாமலை கோஷ்டிக்கு பலம் அதிகம். மாநிலம் முழுவதும் உள்ள தியேட்டர்களை ஒருங்கிணைத்து இனிமேல் எம்.ஜி அடிப்படையில் படம் திரையிடுவதில்லை என்ற முக்கியமான முடிவை எடுத்து அறிவிக்க திருச்சியில் கூட்டம் நடத்த ஏற்பாடு நடந்து வந்தது.

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஆர்எம் அண்ணாமலை தலைமையில், ரோகிணி பன்னீர்செல்வம் கட்டுப்பாட்டில் உள்ளது. இதுவே தமிழகஅரசு அங்கீகாரம் பெற்ற அமைப்பு. இதற்கு நீண்ட காலமாக தேர்தல் நடத்தப்படாமல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகின்றது. இந்த அமைப்பின் தலைவராக திருப்பூர் சுப்பிரமணியம் கொண்டு வரப்பட வேண்டும் என ஒரு தரப்பு முயற்சித்து வருகின்றது. நீண்ட நாட்களாக தமிழ்நாடு தலைவராக ஆக வேண்டும் என்ற கனவில் இருந்து வரும் அபிராமி ராமநாதனும் இதற்கான முயற்சியில் உள்ளார்.

தியேட்டரை லீசுக்குக் கொடுத்து விட்டு தொழிலை விட்டு ஒதுங்கி ஓய்வு எடுத்துவரும் ஆர்எம் அண்ணாமலை பதவியை விட்டு தர விரும்பவில்லை. இவரை பொம்மை தலைவராக வைத்துக் கொண்டு தன் கட்டுப்பாட்டில் சங்கத்தை நடத்தி வருகிறார் ரோகிணி பன்னீர்செல்வம். சுயநலம் சார்ந்த இவர்களின் நடவடிக்கைகளால் தமிழ் சினிமாவை ஒழுங்குபடுத்தவும், திரையரங்கு உரிமையாளர்கள் இனியும் நஷ்டப்படாமல் இருக்கவும் முடிவு எடுப்பதற்காக கூட்டப்பட இருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது. இதனால் பாதிக்கப்படப் போவது சாதாரண தியேட்டர் உரிமையாளர்களே!

- ராமன்

English summary
Sources say that the special meeting organised by theaters owners association has been cancelled due to the tough competition for the association's president post.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil