twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இனி எந்தத் தியேட்டரிலும் கமல் படத்தை ரிலீஸாக விடமாட்டோம்! - திரையரங்க உரிமையாளர்கள்

    By Shankar
    |

    Theater owners press meet
    சென்னை: விஸ்வரூபத்தை டிடிஎச்சில் வெளியிடும் கமல்ஹாஸனின் எந்தப் படத்தையும் இனி திரையிட மாட்டோம் என தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் ஒட்டுமொத்தமாக அறிவித்துவிட்டனர்.

    எனவே விஸ்வரூபம் எந்தத் திரையரங்கிலும் வெளியாகாத நிலை ஏற்பட்டுள்ளது.

    டிடிஎச்சில் படம் வெளியிடும் தன் முடிவை தியேட்டர் உரிமையாளர்கள் பின்னர் புரிந்துகொள்வார்கள் என்று கூறிவிட்டு, திட்டமிட்டபடி தன் முடிவை செயல்படுத்தும் வேலைகளில் தீவிரமாக உள்ளார் கமல். நேற்று இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டார்.

    ஏர்டெல், வீடியோகான், ரிலையன்ஸ், சன் டைரக்ட், டிஷ் டிவி ஆகிய டாப் 5 டிடிஎச் நிறுவனங்கள் மூலம் இந்தப் படத்தை ஒளிபரப்புகிறார் கமல். இதற்கான வர்த்தகமும் முடிந்துவிட்டது.

    அதன் பிறகு 11 மணி நேரம் கழித்து திரையரங்குகளில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளார். ஆனால் எந்த தியேட்டரும் படத்தை திரையிட முன்வரவில்லை.

    தங்கள் கோரிக்கைகளையும் மீறி விஸ்வரூபத்தை டிடிஎச்சில் கமல் வெளியிடத் தயாராக இருப்பதால் இனி அவரது எந்தப் படத்தையும் தியேட்டர்களில் வெளியிடக் கூடாது என திட்டவட்டமாக அறிவித்துள்ளார் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க பொதுச் செயலர் பன்னீர் செல்வம் அறிவி்த்துள்ளார்.

    இதனால் விஸ்வரூபம் டிடிஎச்சில் மட்டும் ஒளிபரப்பாகும் சூழல் உள்ளது.

    English summary
    Tamil Nadu Theater owners association strongly told that they wouldn't screen Kamal's Viswaroopam in any single screen all over Tamil Nadu.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X