»   »  சென்னையில் மட்டும் இயங்குமா? - தியேட்டர் ஸ்ட்ரைக்கில் நிலவும் குழப்பம்!

சென்னையில் மட்டும் இயங்குமா? - தியேட்டர் ஸ்ட்ரைக்கில் நிலவும் குழப்பம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
நாளை தியேட்டர் ஸ்ட்ரைக் இல்லை- வீடியோ

சென்னை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை முதல் தமிழகத்தில் அனைத்து தியேட்டர்களும் மூடப்படும் என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்தது.

இந்த ஸ்ட்ரைக்கில் நாங்கள் கலந்து கொள்ளவில்லை என சென்னை மல்ட்டி பிளக்ஸ் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

'நாளை முதல் சென்னையில் மட்டும் தியேட்டர்கள் திறந்திருக்கும்' என அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.

தியேட்டர்கள் மூடல்

தியேட்டர்கள் மூடல்

தமிழக அரசின் 8% கேளிக்கை வரியை முற்றிலுமாக ரத்துசெய்ய வேண்டும், பெரிய தியேட்டர்களில் இருக்கைகளைக் குறைக்க அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்ச் 16 முதல் தமிழகத்தில் அனைத்து தியேட்டர்களும் மூடப்படும் என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்தது.

அபிராமி ராமநாதன்

அபிராமி ராமநாதன்

ஆனால், இந்த ஸ்ட்ரைக்கில் நாங்கள் கலந்து கொள்ளவில்லை என சென்னை மல்ட்டிபிளெக்ஸ் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதன் தலைவர் அபிராமி ராமநாதன், "சென்னையில் உள்ள மல்ட்டி பிளக்ஸ் மற்றும் நகர தியேட்டர்கள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கும். நாங்கள் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

அபிராமி ராமநாதன் பேட்டி

அபிராமி ராமநாதன் பேட்டி

'சென்னையில் உள்ள திரையரங்குகள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. சென்னையில் உள்ள 147 திரையரங்கு உரிமையாளர்களால் இந்த முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்ப் படங்கள், பிறமொழிப் படங்கள் சென்னை திரையரங்குகளில் திரையிடப்படும்' என்று அபிராமி ராமநாதன் கூறியுள்ளார்.

குழப்பம்

குழப்பம்

தமிழகம் முழுவதும் ஸ்ட்ரைக் அறிவிக்கப்பட்ட நிலையில் சென்னை திரையரங்குகள் கலந்து கொள்ளாது என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த ஸ்ட்ரைக்கில் திடீரென குழப்பம் ஏற்பட்டுள்ளது. உரிமையாளர்களின் ஒற்றுமையின்மையால் ஸ்ட்ரைக்கின் நோக்கம் சிதைந்துபோக வாய்ப்பிருக்கிறது.

English summary
Tamilnadu Theater Owners Association announced that all the theaters would be closed in Tamilnadu tomorrow, emphasizing various demands. But, Chennai Multiflex Theater Owners Association says, "We are not participating in this strike".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X