»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோவை:

சினிமா தியேட்டர்களுக்கான கேளிக்கை வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடுதிரையரங்கு உரிமையாளர் சங்கப் பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.

தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் கோவையில் வியாழக்கிழமை கூடுகிறது.

இந்தப் கூட்டம், தமிழ்நாடு திரையரங்கு உரிமயாளர்கள் சங்கத்திற்கு முழு வடிவம் கொடுக்கவும்,செயல்பாடுகளைத் துரிதப்படுத்தவும் கூட்டப்படுகிறது.

இக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து திரையரங்குஉரிமையாளர்கள் கூறியதாவது:

தமிழ்நாட்டில் திருட்டு வீடியோக்கள் அதிகரித்து விட்டன. எனவே திரையரங்குகளில் கூட்டம் குறைந்து விட்டது.தியோட்டருக்கு வருவோரின் எண்ணிக்கை குறைந்தாலும், அரசுக்கு வரி செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

தெருவில் நிறுத்தும் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யும்போது, தியேட்டருக்குள் நிறுத்தப்படும்வாகனங்களுக்கு வாடகை வசூல் செய்வதில் தவறு இல்லை.

வெளியில் குளிர்பானங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், தியேட்டரில் விற்பனைசெய்யும் குளிர்பானங்களுக்குக் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை மட்டும் கேட்கலாமா?.

மத்திய அரசின் நியூஸ் ரீல் ஒளிபரப்பிற்கு நாங்கள் எதுவும் கட்டணம் கேட்பதில்லை. ஆனால் அரசு அதற்கு ஒருசதவீதம் வரி விதித்துள்ளது. இது நியாயமாகத் தெரியவில்லை.

தமிழகத்தில் 1800 தியேட்டர்கள் உள்ளன. இவற்றில் 800 தியேட்டர்கள் மட்டுமே லாபத்தில் இயங்குகின்றன.

இதே நிலை நீடித்தால், தியேட்டர்களை திருமண மண்டபங்களாகவும், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஆகவும் மாற்றவேண்டிய கட்டாயம் ஏற்படும். இதைத் தவிர வேறு வழியில்லை என்றனர்.

பொதுக்குழுக் கூட்டத்தில், கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும், பராமரிப்புக் கட்டணத்தை உயர்த்தவேண்டும், தியேட்டர்களைச் சோதனையிட அமைக்கப்பட 7 பேர் கொண்ட தனிப்படையை ரத்து செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil