twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வலிமை வந்தா தான் தமிழ் சினிமாவை காப்பாத்த முடியும்... திரையரங்க உரிமையாளர்கள் வெயிட்டிங்

    |

    சென்னை : நடிகர் அஜித் லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ள வலிமை படம் கொரோனா பரவல் காரணமாக ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது.

    Recommended Video

    தெறிக்கும் 'வலிமை' டிரைலர்..! மகிழ்ச்சிக்கடலில் AK ரசிகர்கள்..!

    இதையடுத்து பொங்கல் பந்தயத்தில் சிறிய படங்கள் கலந்து கொண்டன.

    இந்நிலையில் வலிமை படம் ரிலீசானால் மட்டுமே தமிழ் சினிமாவை காப்பாற்ற முடியும் என்று பிரபல திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    நாங்க வசூல் மட்டுமில்லீங்க... விருதுகளையும் குவிப்போம்ல... நிரூபித்த மாநாடு நாங்க வசூல் மட்டுமில்லீங்க... விருதுகளையும் குவிப்போம்ல... நிரூபித்த மாநாடு

    வலிமை படம்

    வலிமை படம்

    நடிகர் அஜித், ஹுமா குரேஷி உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து உருவாகியுள்ள படம் வலிமை. படத்தை எச் வினோத் இயக்க, போனி கபூர் தயாரித்துள்ளார். பொங்கலையொட்டி இந்தப் படம் ரிலீசாக இருந்த நிலையில், கொரோனா மற்றும் அதையொட்டி திரையரங்குகளில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளையடுத்து படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    எதிர்பார்ப்பில் திரையரங்க உரிமையாளர்கள்

    எதிர்பார்ப்பில் திரையரங்க உரிமையாளர்கள்

    படம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் உள்ளிட்டவர்கள் ஏக குஷியில் இருந்தனர். கடந்த தீபாவளிக்கு அண்ணாத்த, எனிமி உள்ளிட்ட படங்கள் வெளியாகி அவர்களுக்கு கைகொடுத்த நிலையில், பொங்கலுக்கு வலிமை அந்த இடத்தை பூர்த்தி செய்யும் என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் இருந்தனர்.

    சிறிய பட்ஜெட் படங்கள்

    சிறிய பட்ஜெட் படங்கள்

    கொரோனா பரவலும் இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. மேலும் பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீசாகாததும் ரசிகர்கள் திரையரங்குகளில் வந்து படம் பார்க்காததற்கு முக்கிய காரணம். மேலும் வீட்டிலேயே இருந்து ஓடிடி மற்றும் டிவியில் படங்களை பார்க்க இந்த பொங்கலில் ரசிகர்கள் ஆர்வம் காட்டினர்.

    வெறிச்கோடிய திரையரங்குகள்

    வெறிச்கோடிய திரையரங்குகள்

    கொரோனா பரவலும் இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. மேலும் பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீசாகாததும் ரசிகர்கள் திரையரங்குகளில் வந்து படம் பார்க்காததற்கு முக்கிய காரணம். மேலும் வீட்டிலேயே இருந்து ஓடிடி மற்றும் டிவிக்களில் படங்களை பார்க்க இந்த பொங்கலில் ரசிகர்கள் ஆர்வம் காட்டினர்.

    நஷ்டமடையும் சூழல்

    நஷ்டமடையும் சூழல்

    இதனால் சிறிய பட்ஜெட் படங்களாக இருந்தாலும் பரவாயில்லை என்று தங்களது திரையரங்குகளில் ரிலீஸ் செய்த உரிமையாளர்கள் நஷ்டமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் மனவருத்தத்தில் காணப்படுகின்றன.

    திரையரங்க உரிமையாளர்கள் காத்திருப்பு

    திரையரங்க உரிமையாளர்கள் காத்திருப்பு

    சென்னையில் உள்ள பிரபல கணேஷ் திரையரங்க உரிமையாளர் கூறுகையில், பொங்கல் பிசினஸ் மிகவும் மோசமாக அமைந்துள்ளதாகவும் வலிமை படம் தங்களை காப்பதற்காக காத்திருப்பதாகவும் கூறியுள்ளார். இதேபோல திண்டுக்கல்லின் உமா ராஜேந்திரா சினிமாஸ் உரிமையாளரும் கொரோனா 3வது அலைக்கு பிறகு வலிமை படமே தங்களை காக்கும் என்று கூறியுள்ளார்.

    English summary
    Theatre owners waiting for Valimai movie release
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X